நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படமாட்டாது

  புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட விவாதங்கள் நடைபெறவுள்ளது.இந்த விவாதங்கள் காலை 10.30 தொடக்கம் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட விவாதங்கள் நடைபெறவுள்ளது.இந்த விவாதங்கள் காலை 10.30 தொடக்கம் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.

 எனினும், அரசியலமைப்பு சபை விவாதம் என்பதால் இந்த விவாதம் நடைபெறும் மூன்று நாட்களும் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட மாட்டாது. அத்துடன் விவாத முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படவும் மாட்டாது.

 புதிய அரசியலமைப்பு தொடர்பான இந்த விவாதத்தில் ஆளுங்கட்சியுடன் தமிழ்த் ​தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன ஆதரவு நிலையில் விவாதத்தில் கலந்து கொள்ளவுள்ளன. கூட்டு எதிர்க்கட்சி மாத்திரமே புதிய அரசியலமைப்புக்கு எதிராக விவாதத்தில் கலந்து கொள்ளவுள்ளது.