இலங்கையிலிருந்து 148 யாத்­தி­ரி­கர்கள் அடங்கிய முதலாவது ஹஜ் குழு ஞாயி­றன்று பய­ண­மா­க­வுள்­ளது

இலங்­கையின் முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் குழு நாளை மறு­தினம் ஞாயி­றன்று பய­ண­மா­க­வுள்­ளது.

கட்­டு­நா­யக்க, பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து இரவு 9.05 க்கு சவூதி எயார் விமா­னத்­தி­லேயே முத­லா­வது யாத்­தி­ரி­கர்கள் குழு பய­ண­மா­க­வுள்­ளது. இக்­கு­ழுவில் 148 யாத்­தி­ரி­கர்கள் சவூ­திக்கு செல்­ல­வுள்­ளனர்.

இவர்­களை முஸ்லிம் சமய விவ­காரம், தபால் மற்றும்  தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்­கள பணிப்­பாளர், ஹஜ்­குழு உறுப்­பி­னர்கள், அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளிட்டோர் விமான நிலை­யத்­திற்கு சென்று வழி­ய­னுப்பி வைக்­க­வுள்­ளனர்.

சவூதி நேரப்­படி நள்­ளி­ரவு 12.30 மணிக்கு ஜித்தா விமான நிலை­யத்தை அடையும் இலங்கை யாத்­தி­ரி­கர்­களை சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கை தூதுவர் அஸ்மி தாஸிம், பதில் கவுன்­ஸிலர் ஜெனரல் எஸ்.எல்.கே. நியாஸ், மொழி­பெ­யர்ப்பு அதி­காரி நளீர் உள்­ளிட்டோர் வர­வேற்­க­வுள்­ளனர்.

அத்­துடன், இரண்­டா­வது யாத்­தி­ரி­கர்கள் குழு ஸ்ரீ லங்கன் எயார்லைன் மூலம் மறுநாள் திங்­கட்­கி­ழமை 7 ஆம் திகதி 90 பய­ணி­க­ளுடன் செல்­ல­வுள்­ளது. அதே தினத்தில் ஒமான் எயாரில் 29 பேரும் சவூதி எயாரில் 160 பேரும் பய­ணிக்­க­வுள்­ளனர். 8 ஆம் மற்றும் 9 ஆம் திக­தி­க­ளிலும் பல விமா­னங்கள் மூலம் யாத்­தி­ரி­கர்கள் பய­ணிக்­க­வுள்­ளனர்.

இதே­வேளை, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் வைத்­தி­யர்கள் அடங்­கிய ஹஜ் குழு உறுப்­பி­னர்கள் அடங்­கிய குழு 10 ஆம் திகதி பய­ணிக்­க­வுள்­ளனர்.
முதற்­கட்­ட­மாக 6 ஆம் திகதி முதல் 17 ஆம் திக­தி­வரை பய­ணிக்­க­வுள்­ளனர். இரண்டாம் கட்ட பய­ணிகள் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை சவூ­திக்கு செல்­ல­வுள்­ளனர். இரண்டாம் குழு­வுடன் 180 ஆம் திகதி ஹஜ் குழு தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் மலிக், உள்­ளிட்­டோரும் செல்­ல­வுள்­ளனர்.

24 ஆம் திகதி ஹஜ் குழு உறுப்­பி­னர்­க­ளான எம்.எச்.ஏ.பாஹிம், சட்­டத்­த­ரணி சிராஸ்­நூர்தீன் மற்றும் திணைக்­கள அதி­கா­ரி­களும் பய­ணிக்­க­வுள்­ளனர். 24 ஆம் திக­தி­முதல் 27 ஆம் திக­தி­வரை மூன்­றாம்­கட்ட யாத்­தி­ரி­கர்கள் சவூ­திக்கு செல்­ல­வுள்­ளனர்.

இத­னி­டையே முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் எதிர்வரும் 26 ஆம் திகதி சவூதிக்கு செல்லவுள்ளார். அத்துடன் இம்முறை ஹஜ் குழுவில் ஐந்து வைத்தியர்கள் அடங்குகின்றனர்.

2017 ஆம் ஆண்டு ஹஜ் கடமைக்கு இலங்கைக்கு 2840 கோட்டா கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

SNM.Suhail