கிழக்கு முத­ல­மைச்சர் விட­யத்தில் முஸ்லிம் தலை­வர்­களை சந்­தித்து பேசி ஒரு முடி­வெ­டுப்போம் : சம்பந்தன் ஐயா

 கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் விட­யத்தில் முஸ்லிம் தலை­வர்­களை சந்­தித்து பேசி ஒரு முடி­வெ­டுப்போம் என எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.
 மட்­டக்­க­ளப்­பி­லுள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மாவட்ட அலு­வ­லக கட்­டி­டத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 
 
இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட கிளையின் முக்­கி­யஸ்­தர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாகாண சபை உறுப்­பி­னர்கள் மாவட்ட மத்­திய குழு உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கி­ய­தான ஒரு விஷேட கூட்­ட­மொன்று இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட அலு­வ­ல­கத்தில் ஞாயிற்றுக்கி­ழமை நடை­பெற்­றது.
இந்த கூட்டம் தொடர்­பாக எதிர்க்­கட்சி தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் ஊட­க­வி­லா­ளர்­க­ளுக்கு விளக்கி கூறினார்.
 
 
 
இங்கு தொடர்ந்து கருத்து தெரி­வித்த அவர் புதிய அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்­பான நகல் எதிர் வரும் ஆவணி மாதம் எமது கைக­ளுக்கு கிடைக்கும் என நாம் எதிர் பார்க்­கின்றோம்.
அர­சியல் தீர்வு என்­பது தமிழ் மக்­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். புதிய அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வது நாட்­டுக்கு தேவை­யான ஒன்­றாகும். இதனை சர்­வ­தேச சமூகம் அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.
புதிய அர­சியல் சாசனம் அதி­கார பகிர்வு உட்­பட அத­னு­டைய வரைவு வரும் வரை நாங்கள் பக்­கு­வ­மாக நிதா­ன­மாக எங்­க­ளது காரி­யத்தை செய்ய வேண்­டிய தேவை இருக்­கின்­றது தொடர்­பாக இந்தக் கூட்­டத்தில் கலந்­து­ரை­யா­டினோம்.
 
 
அதே போன்று மீள்­கு­டி­யேற்றம், காணிப்­பி­ரச்­சினை, காணாமல் ஆக்­கப் பட்டோர் தொடர்­பான விட­யங்கள் மற்றும் வீட­மைப்பு மற்றம் புனர்­வாழ்வு மற்றும் இதில் ஏற்­ப­டு­கின்ற தாம­தங்கள் குறித்தும் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­ரை­ய­டினோம். புதிய அர­சியல் சாச­னத்தின் நகல் வரைவு விஷே­ட­மாக அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பான நகல் ஆவணி மாதத்தில் வெளி­வ­ரலாம் என்ற ஒரு எதிர்­பார்ப்பு இருக்­கின்­றது.
அந்த இடைக்­கால வரைவு வெளி வந்­த­வுடன் ஒவ்­வொரு மாவட்டம் மற்றும் தொகு­தி ­ரீ­தி­யாக மக்­களை சந்­தித்து நாங்கள் கலந்­து­ரை­யடி அது தொடர்­பாக முடி­வெ­டுப்போம்.
 
 
கிழக்கு மாகாண சபை தேர்தல் இவ்­வ­ருடம் நடை­பெ­ற­வேண்டும். ஆனால் தேர்தல் முறைமை சம்­பந்­த­மாக அர­சாங்கம் பரி­சீ­லித்து வரு­கின்­றது.ஒரு கலப்பு முறை தேர்­த­லாக இருக்கும் தொகு­தி ­ரீ­தி­யா­கவும் விகி­தா­சார முறை­யா­கவும் இருக்கும். என்­றாலும் மக்கள் தேர்­த­லுக்கு ஆயத்­த­மாக வேண்டும் புதிய அர­சியல் சாசனம் அர­சியல் தீர்வு ஏற்­ப­ட­வுள்ள சந்­தர்ப்­பத்தில் அந்த அர­சியல் தீர்வை எடுத்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய கடமை மாகாண சபை­க­ளுக்­குண்டு என்றார்.
 
 
அடுத்த இரண்டு வரு­டங்­க­ளுக்­கு கிழக்கு மாகாண முத­ல­மை­தச்சர் பதவி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வழங்­கப்­ப­டு­மென ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் அது நடக்க வில்லை. முஸ்லிம் ஒரு வரு­வ­ருக்கு முத­ல­மைச்சர் பதவி வழங்­கி­யதால் தமி­ழர்கள் அடைந்து கொண்ட நன்மை என்ன  என ஒரு ஊட­க­வி­லாளர் கேட்­ட­தற்கு எமக்கு இன்னும் ஓரிரு ஆச­னங்கள் கிடைக்கப்பெற்­றி­ருந்தால் நாங்கள் ஆட்­சி­ய­மைத்­தி­ருக்­கலாம்.
ஆனால் சில குள­று­ப­டிகள் கார­ண­மாக எங்­க­ளுக்கு அந்த ஆச­னங்கள் கிடைக்க வில்லை.
 
 
இந்த விடயம் தொடர்பில் நாங்கள் பரி­சீ­லிப்போம். நாங்கள் முஸ்லிம் தலை­வர்­களை சந்­தித்து பேசுவோம். எமது மக்­களின் உரி­மை­களை பாது­காக்க வேண்­டி­யதும் உறு­திப்­ப­டுத்த வேண்­டி­யதும் எமது கடமை. ஆனால் ஒரு பக­மையை ஏற்­ப­டுத்­தாத வகையில் இந்த கரு­மத்தை ஒரு நிதா­ன­மாக செய்ய வேண்டும்.
எல்­லோ­ருக்கும் நீதி­யான தீர்வு கிடைக்க கூடிய வகையில் வழி செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளருமான கே.துரைராஜசிங்கம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சீரீநேசன், மற்றும் கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
 

எம்.எஸ்.எம்.நூர்தீன் – vidivelli