இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாப்வே அணி அபாரவெற்றி

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் அபாரவெற்றிபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் சிம்­பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று காலியில் ஆரம்பமாகியது. இதன் முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில்  துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களை சிம்பாப்வே அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இலங்கை அணிசார்பாக துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களையும் உபுல் தரங்க ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களையும் குணதிலக்க 60 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக சத்தர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 317 ஓட்டங்களைப்பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை மிகவும் எளியமையாக எதிர்கொண்டு வெற்றி இலக்கை அடைந்தது.

மிகவும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 47.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களைப்பெற்று 6 விக்கெட்டுகளால் அபாரவெற்றிபெற்றது.

சொந்த மண்ணில் தோற்ற இலங்கை அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

சிம்பாப்வே அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அசத்திய மிர் 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிலையில் இலங்­கைக்கு சுற்றுப்பயணம் மேற்­கொண்­டுள்ள சிம்­பாப்வே அணி ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்­டி­யிலும் விளை­யா­டு­கின்­றது.