புதிய பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அடிக்கல் நடும் வைபவம் !

ameer4_Fotorm];ug; V rkj;

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிட்டில் களுவாஞ்சிக்குடிக்கான புதிய பஸ் தரிப்பிட நிலையத்திற்கு அடிக்கல் நடும் வைபவம் 25.05.2015ம் திகதி (இன்று) கிராமத்தலைவரும், களுவாஞ்சிக்குடி அபிவிருத்திச் சங்கத்லைவருமான திரு.அ. கந்தவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. பொன் செல்வராஜா, மாகாண சபை உறுப்பினர்களான நா. கிருஸ்னப்பிள்ளை, கோ. கருணாகரன், மா. நடராஜா மற்றும் பிரதேச செயலாளர் மு.கோபாலரட்ணம் , இ.போ.சபையின் கிழக்கு பிரதம பிராந்திய முகாமையாளர் ஏ.எல். சித்தீக் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் அமைச்சரின் இணைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ameer1_Fotor ameer3_Fotor ammer 2_Fotor

 

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-