இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார்

 

download (2)

இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் ஏப்ரல் -19ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து வரும் ஹரி சங்கர் பிரம்மா , வரும் 18ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

இந்த பொறுப்பில் ஜனாதிபதி நியமித்துள்ள செய்யது நசீம் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். 1976 ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர். விமானதுறையில் டைரக்டர் ஜெனரலாகவும், ஏர் போர்ட் ஆணையத்தின் தலைவராகவும், சில மாநிலங்கள் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான செய்யது வரும் 19ம் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்று கொள்கிறார்.