• Home »
  • Slider »
  • கனடாவிற்கான நேரடியான விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்ள திட்டம்

கனடாவிற்கான நேரடியான விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்ள திட்டம்

கனடாவிற்கான நேரடியான விமானச்சேவையினை இலங்கையிலிருந்து மேற்கொள்வதற்கான திட்டத்திற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இலங்கையர்கள் அதிகளவில் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும் இதுவரையில் இலங்கைக்கும் கனடாவுக்குமிடையில் எவ்விதமான நேரடி விமானச்சேவையும், அல்லது அதற்கான உடன்படிக்கையோ கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமானச்சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில் விமானசேவைகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை செயற்படுத்துவதற்கும் அமைச்சரவையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த திட்டம் தொடர்பாக போக்குவரத்து மற்றும் விமானச்சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-