முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்குகள் முயற்சி

அம்­பாறை, இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு, மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள காணி­களை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்­சியை நேற்று வியா­ழக்­கி­ழமை பௌத்த பிக்­குகள் மேற்­கொண்­டுள்­ளனர். சில மாதங்­க­ளுக்கு முன்னர் அப் பகு­தியில் புத்தர் சிலை ஒன்றை நிறு­வி­யி­ருந்த நிலையில் நேற்­றைய தினம் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­கு­களும் மேலும் சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டனர்.

எனினும் ஸ்தலத்­திற்கு விரைந்த இறக்­காமம் பிர­தேச மக்கள் மேற்­படி விகாரை அமைக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­த­துடன் பொலி­ஸாரின் கவ­னத்­துக்கும் கொண்டு சென்­றனர்.இச் சம்­பவம் கார­ண­மாக இப்­பி­ர­தே­சத்தில் பதற்ற நிலை ஏற்­பட்­டது. இத­னை­ய­டுத்து பொலிஸார் தலை­யீடு செய்து விகாரை அமைக்கும் பணி­களை தடுத்து நிறுத்­தினர்.

செவ்­வாய்க்­கி­ழமை மாலை இம்  மலை­ய­டி­வா­ரத்­திற்குச் செல்­வ­தற்­கான வீதி­யையும் விகாரை அமைப்­ப­தற்­கான காணி­யி­னையும் கன­ரக வாக­னங்கள் மூல­மாக பௌத்த பிக்­குகள் முன்­னின்று செப்­ப­னிட்­டுள்­ளனர். இது தொடர்பில் காணிச் சொந்­தக்­காரர் ஒருவர் தமண பொலிஸில்  முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

இந்­நி­லை­யி­லேயே நேற்று வியா­ழக்­கி­ழமை காலை மலை­ய­டி­வா­ரத்தில் விகாரை நிர்­மாணப் பணி­களை பிக்­குகள் முன்­னெ­டுத்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து  பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்கி மூலம் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­ட­தற்­கி­ணங்க,  உட­ன­டி­யாக பிர­தேச மக்கள் மாயக்­கல்வி மலை­ய­டி­வா­ரத்­திற்கு சென்று பௌத்த தேரர்­க­ளிடம் தமது ஆட்­சே­ப­னையை முன்­வைத்­தனர்.

இந் நிலை­யி­லேயே அம்­பாறை பிராந்­திய உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் மனோஜ் ரண­கல, தமண பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி ஹர்ஷ சில்வா ஆகியோர் ஸ்தலத்­திற்கு விஜயம் செய்து நிலைமையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.அதன் பின்னர் ஒன்­று­கூ­டிய பிர­தேச மக்கள் அனை­வரும் இறக்­காமம் பிர­தேச செய­லாளர் காரி­யா­லயம் சென்று செய­லாளர் எம்.எம். நஸீரைச் சந்­தித்து நடந்த விட­யங்­களை எடுத்துக் கூறினர். 

இதே­வேளை, விடயம் அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஆரிப் சம்­சுதீன், இறக்­காமம் பிர­தேச அபி­வி­ருத்திக் குழு தலைவர் எஸ்.ஐ. மன்சூர், சுகா­தார அமைச்­சி­னது இணைப்புச் செய­லாளர் எம்.எஸ். ஜெமீல் காரி­யப்பர், முன்னாள் பிர­தேச சபை தவி­சாளர் எம்.ஐ. நைஷார், சட்­டத்­த­ரணி பாறூக் ஆகியோர் ஸ்தலத்­திற்கு வருகை தந்து  தமது பிர­தேச மக்­களின் எதிர்ப்­பினை பௌத்த பிக்­கு­க­ளிடம் முன்­வைத்­தனர். 

இவ்­வே­ளையில் வருகை தந்த தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள் தொல்­பொருள் பிர­தேச எல்­லைக்கு வெளியே தனியார் காணியில் நிர்­மாணப் பணிகள் நடை­பெ­று­வதை அனு­ம­திக்க முடி­யாது எனவும் தெரி­வித்­தனர். எனினும் இதற்­கு­ரிய எல்­லையை சீரான முறையில் வரை­யறை செய்யும் முக­மாக இறக்­காமம் பிர­தேச செய­லா­ளரை ஸ்தலத்தில் நின்ற அம்­பாறை உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் மனோஜ் ரண­கல அழைத்தபோது பிரதேச செயலாளர் வருகை தர மறுத்துவிட்டார்.

இதனையடுத்து நீதிமன்றத்தின் மூலம் சமரச முடிவுக்கு வரும்வரை சகல நிர்மாணப் பணிகளையும் நிறுத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பௌத்த பிக்குகளை கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அங்கு சுமுக நிலை ஏற்பட்டது.

Vidivelli