வீதிச் சண்டை

Mohamed Nizous

வட கொரியா போல் ஒருவர்
வாயடித்துத் தொடங்குவார்
அடே கெ…யா எனச் சொல்லி
அமெரிக்கா ஜனாதிபதிபோல்
படம் காட்டி கத்துவார்
பக்கத்து ஆசாமி

நைனா ஒருவர்
நடுவிலே நின்று கொண்டு
ஐ நா சபையாகி
அமைதிக்காய் பேசுவார்

கூத்துப் பார்ப்பதற்காய்
கூடும் கூட்டத்தில்
சாத்துக் குடி ஜூஸ் விற்பார்
சைனா போல் ஒருவர்

அத்தனையும் நடக்கையிலே
அரபு நாடு போல் சிலர்
மொத்திக் கொண்டிருப்பார்
முழுக் கோழி புரியாணியை

ரஷியாவைப் போல் ஒருவர்
ரகசியமாய் ஊடுருவி
ரசிப்பது போல் நிற்பார்
ரம்பத்தைக் கொடுப்பார்

அண்ணே அடிங்கண்ணே
அப்படியே உசார் கொடுப்பார்
சின்னச் சண்டியனான
இஷ்ரேல் போல் ஒருவர்

பேஷ் புக்கைத் திறந்து
பெரிதாக லைவ் கொடுத்து
பேஷ் பேஷ் எனச் சொல்வார்
பிபிசி போல் ஒருவர்

சண்டை நடக்காது
சகலதும் முடிந்த பின்னால்
எண்ட முயற்சியால்தான்
எல்லாம் முடிந்ததென்பார்
மோடி போல் ஓடி வந்து
மூளை கெட்டொருவர்.