Home அரசியல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரு விடுதிகளை அமைக்க அரசாங்கம் தீர்மானம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரு விடுதிகளை அமைக்க அரசாங்கம் தீர்மானம்

 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விடுதிகளை அமைத்து பராமரிப்பதற்காக 40 வருடங்கள் குத்தகைக்கு வழங்கல் தொடர்பில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளமையால் விமான நிலைய எல்லைக்குள் இரண்டு விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்தோடு குறித்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த விடுதிகளை அமைப்பதற்காக, மலேசியாவின் ஈசீஎம் லிப்ரா பய்னேன்ஷியல் குறூப் பர்ஹேட் மற்றும் சிங்கப்பூரின் டீபி ரியல் எஸ்டெட் ஹோல்டின்ஸ் ஆகிய நிறுவன முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.