YLS ஹமீட் அவர்களே , இப்ராஹிம் மன்சூரின் சவாலுக்கு நீங்கள் தயாரா ?

(இப்ராஹிம் மன்சூர்:கிண்ணியா)

 நேற்று முன்தினம் இடம்பெற்ற ரங்காவின் மின்னல் நிகழ்ச்சியில் எனது பெயரை கூறி,என்னை நாட்டிற்கே அறிமுகம் செய்து வைத்தமைக்காக முதற் கண் இவ்விடத்தில் நன்றி கூறி,எனது உங்களுக்கான மடலை ஆரம்பம் செய்யலாம் என நினைக்கின்றேன்.நான் எப்போதும் உங்கள் கருத்தோடு மோத முற்பட்டேனே தவிர உங்கள் தனிப்பட்ட விடயங்களில் கை வைக்க விரும்பியதில்லை.இதன் காரணமாக என்னை நீங்கள் ஒரு பகிரங்க நிகழ்வில் விமர்சித்தமையை  எனது எழுத்திற்கான ஒரு அங்கீகாரமாக கருதுகிறேன் (பலர் உங்களுக்கு மறுப்பு அறிக்கைகள் எழுதுகின்ற போதும் என்னை மாத்திரம் கூறினீர்களே!).

நான் அமைச்சர் றிஷாத்தினால் பணம்,வீடு கொடுத்து அவரின் கருத்துக்களை எழுத்து வடிவில் கொண்டுவர இயக்கப்படும் ஒருவனாக கூறி இருந்தீர்கள்.இதனை நிரூபிப்பீர்களா? அமைச்சர் றிஷாதிடம் மீடியா அணியினர் உள்ளனர்.அவர் கூறுவதை அவர்கள் செவ்வெனே எழுதி கொடுக்கக் கூடியவர்கள் என்பது உங்களுக்கும் தெரியும்.அவர் ஏன் இன்னுமொருவரை வைத்து எழுத வேண்டும்? இப்றாஹிம் மன்சூர் ஆகிய நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன்.நான்,அமைச்சர் றிஷாத் என்னை எழுதுமாறு பணித்து  இப் பெயரில் எதனையும் எழுதவில்லை என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய தயாராக உள்ளேன்.அப்படி நான் செய்தால்,நீங்கள் உங்கள் அரசியலை நிறுத்துவதோடு அமைச்சர் மீது மீதான இட்டுக்கட்டலுக்கு மன்னிப்பு கோர வேண்டும்.நீங்கள் இதற்கு ஏற்றுக்கொண்டால் அடுத்த நிகழ்வுக்குள் நான் யார் என்பதை வெளிப்படுத்துவேன்.அடுத்த நிகழ்வுக்கும் நீங்க தானாமே வாறிங்க.

நான் எழுதுவது உங்களுக்கு பாதிப்பாக அமையுமாக இருந்தால்,அதனை எதிர்த்து நீங்கள் எழுதியிருக்கலாம்.அதைவிட்டு விட்டு ஆள் தேடி அலைவது உங்கள் இயலாமையை புடம் போட்டுக் காட்டுகிறது.அமைச்சர் றிஷாத் பேக் முக நூல்கள் மூலம் எழுதுவதாக கூறியிருந்தீர்கள்.இந்த குற்றச் சாட்டு இன்று நேற்று வந்ததல்ல.நீங்கள் அக் கட்சியின் செயலாளராக இருக்கும் போதே அவர் மீதிருந்த குற்றச் சாட்டாகும்.இதனை அனைவரும் (இதனை வாசிப்பவர்கள்) ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.குறித்த நிகழ்ச்சியில் ரங்கா அவர்களை பார்த்து “இது உங்களுக்கு தெரியும் தானே! நீங்கள் இருக்கும் போதே அவர் பேக் முக நூல் பாவித்தார் தானே!” அவர் செய்தார் என கூறுகின்றமை தெளிவாக்குகிறது.நீங்கள் குறித்த நிகழ்வில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு அமைச்சர் றிஷாத்தின் பேக் முக நூலாட்டம் ஆரம்பித்ததாக கூறியிருந்தீர்கள்.இவை இரண்டையும் நோக்கும் போது அமைச்சர் றிஷாத் மீது கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு போலி முகநூல்களை வைத்து எழுதுகின்றார் என்ற குற்றச் சாட்டு பொய்யானது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.இது அமைச்சர் றிஷாத் மீது வைக்கப்பட்ட போலிக் குற்றச் சாட்டுத் தானே! (இவ்வாறு தான் ,அவர் மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் போலியானதே என்பது வேறு விடயம்)

உண்மை என்ன? இவர் கட்சி மாறிய பிறகு சமூக வலைத் தளங்களில் வை.எல்.எஸ் ஹமீதிற்கான எதிர்ப்புக்கள் வலுவடைந்தன.இதனை பார்த்த வை.எல்.எஸ் ஹமீத்,அமைச்சர் றிஷாத் தனக்கு எதிராக ஆள் வைத்து செய்கிறாரோ என சிந்தித்து இந்த முடிவிற்கு வந்திருக்கலாம்.அவ்வாறில்லை என்றால் இவர் இவர் சம்பளம் கொடுத்து அமைச்சர் றிஷாதால் இயக்கப்படுகிறார் என அடித்து கூற வேண்டும்.அவ்வாறு அவரால் கூற முடியாது.நீங்கள் அக் கட்சியில் இருந்த போது அவரின் மதிப்பை அறியவில்லை.அதனால் அது பெரிதாக உங்களுக்கு தெரியவில்லை.தற்போது நீங்கள் எதிராக இருப்பதால் இந்த சிந்தனை தோன்றுவதில் தவறில்லை.இதனூடாக அமைச்சர் சமூக வலைத் தளங்களில் (வாக்களிக்கும் மக்கள் இவர்கள் தான்) அதிக நன் மதிப்பை பெற்றவர் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.இங்கு நான் நிறுவ வரும் இன்னுமொரு விடயம் “வை.எல்.எஸ் ஹமீத் பேக் முகநூலானது கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு வந்ததாக கூறுகிறார்.இக் குற்றச் சாட்டு அதற்கு முன்பே அவர் மீது இருந்தது”.இவ்விரண்டையும் வைத்து நோக்கினால் இது போலியான குற்றச் சாட்டென்பதை சாதாரணமாக அறிந்து கொள்ளலாம்.

அமைச்சர் றிஷாத் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமைச்சராக உள்ளார்.அவர் பலருக்கு உதவி செய்திருப்பார்.அவர்கள் அவருக்கு ஆதரவளிப்பார்கள்.இம்முறை அவரின் கட்சி இலட்சக்கணக்கான வாக்கை பெற்றிருந்தது.அவர்கள் நீங்கள் ஏதாவது கூறினால் அவர்களது கட்சியையும்,தலைமையையும் பாதுக்காக்க கொதித்தெழுவார்கள்.இதனை தவறாக கூறுவது அறிவாளியின் பேச்சல்ல.இதன் காரணமாக அவர்களை பணத்திற்கு அடிமையானவர்களாக கூற முடியுமா? உங்கள் கண்களுக்கு அமைச்சர் ஹக்கீம் முக நூல் வசை பாடுபவர்களை நுவரெலியாவிற்கு சுற்றுலா அழைத்து சென்றமை கண்ணுக்கு தெரியவில்லையா? அவரின் முந்தானையை பிடித்துக் கொண்டு அவரின் பின்னால் எங்கும்  செல்வது உங்களுக்கு தெரியவில்லையா? பலரையும் ரிலீஸ் கொடுத்து எழுத வைப்பது தெரியவில்லையா? இது எப்படி தெரியும்.இவர்களுக்கு நீங்கள் தானாமே வழிகாட்டியாக செயற்படுகிறீர்களாம்? அப்படி எங்கும் அமைச்சர் றிஷாத் செய்ததற்கு ஆதாரமில்லை.எனது இப் பெயரிலேயே இரண்டு போலி முக நூல்கள் உள்ளன.இதனை எங்கு சொல்வது.நான் ஒரு விமர்சன ரீதியாகவே இதனை இயக்கி கொண்டிருக்கின்றேன்.அவர்கள் மிகவும் கீழ் தரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இறுதியாக சொல்கிறேன்,உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.நீங்கள் அரசியல் செய்ய விரும்பினால் அமைச்சர் றிஷாதை இகழ்ந்து செய்யாமல் வேறு வழியில் செல்லுங்கள்.நீங்கள் நினைப்பவர் இப்றாஹீம் மன்சூர் அல்ல என்பதை மீண்டும் அழுத்தமாக கூறிக் கொள்கிறேன்.வை.எல்.எஸ் ஹமீத் என்னை எழுதாமல் தடுக்க நீர் எடுக்கும் முயற்சி என்னிடம் செல்லாது.இனித் தான்,நான் உங்களுக்கு எதிராக எழுதவே ஆரம்பிக்கப் போகிறேன்.