நாட்டை சர்வதேச விசாரணைகளை நோக்கி மகிந்த ராஜபக்சவே தள்ளினார்: மங்கள சமரவீர

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 13 ஆம் திகதி வெளியிட்டிருந்த ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட மறுசீரமைப்பின் மூலம் நாடு அழியப் போகிறது என குற்றம் சுமத்தி முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். 

எவ்வாறாயினும் மகிந்த வெளியிட்ட அறிக்கையில் அடங்கிய விடயங்கள் திரிபுப்படுத்தப்பட்ட மற்றும் பொய்யான தகவல்களும், முன்னுக்கு பின் முரணான பல விடயங்களும் அடங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 

எது எப்படி இருந்த போதிலும் நாட்டை சர்வதேச விசாரணைகளை நோக்கி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தள்ளினார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தொலை நோக்கம் கொண்ட செயற்பாடுகள் காரணமாக சர்வதேசத்தின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க முடிந்துள்ளது. 

காலம் கடந்து போன பழைய கொடிய சட்டத்திட்டங்களை மாற்றி நவீன உலகத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒழுங்கம் நிறைந்த சட்டத்திட்டங்களை அறிமுகப்படுத்துவது தேசத்துரோகம் அல்ல எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.