கடற்தொழிலாளர்களுக்கு மீன் மற்றும் நண்டு வலைகள் றிப்கான் பதியுதீன் அவர்களினால் வழங்கிவைப்பு

இன்றைய தினம் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கான மீன் மற்றும் நண்டு வலைகளை பிரமான அடிப்படையிலான நன்கொடையாக தனது பன்முகப்படுத்தப்பட்ட  நிதியிலிருந்து  வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  உயர்பீட உறுப்பினருமான  றிப்கான் பதியுதீன் அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்து மீனவர்களிடம் கையளித்தார் 

சவேரியார்புரம், மாளிகைப்பிட்டி , பேசலை , தலைமன்னார்  பியர் ,தாழ்வுபாடு , வங்காலை  போன்ற கிராமங்களில் உள்ள பல மீனவர்களுக்கு இந்த நன்கொடை வழங்கப்பட்டது   மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் வழங்கப்பட்ட இவ் வலை பொருட்களானது இனம் மதம் மொழி வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் வழங்கப்பட்டதோடு எதிர்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யவும் முயற்சிகள் எடுக்கப்படும் என மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்  தெரிவித்தார் மேலும் இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் இணைப்பாளர் முஜாஹிர் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ​

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-