தடுமாறும் முஸ்லிம் காங்கிரசும் , கண்ணீர் வடிக்கும் நிந்தவூர் மக்களும் : கவிஞர் சட்டத்தரணி எஸ். முத்துமீரான்

கள்ள காசு மூட்டைகளையும் 
காவாலிகளையும் ஏற்றித் திரியும்
காங்கிரஸ் கப்பல், மாலுமி இல்லாமல்
போதையில் தத்தளிப்பதை
பார்த்து கட்சிக்காக உயிர்த்தியாகம் செய்த
ஆத்மாக்களுடன் சேர்ந்து உள்ளம் அழுகிறது.

கட்சிலுள்ள காம வெறியர்களும் கள்ளர்களும் சேர்ந்து உள்ளதால், உதிரத்தால்
கட்சியை வளர்த்து முஸ்லீம் சமூகத்தின் உயர்வுக்காக அர்பணிப்புச் செய்த
அன்புச் சகோதரர் அஷ்ரப்யையும்
அவர் கொள்கையையும் மறந்து கூத்திகளோடு
கூத்தடிக்கும் குடிகாரர்களுக்கும் கோமாளிகளுக்கும் தியாகி ஹஸனலியின் தியாகங்கள் தெரியாமல் போனது
அவர்களின் மடமையா? அல்லது அறியாமையா?
எலியை கொம்புள்ள விலங்காக மாற்றிய வித்தையை கூறும் மந்திர வாதியே..!
கொம்புள்ள மிருகம் விரைவில்
எலியாகப் போவது திண்ணம்.

உண்மையான மந்திரவாதி மறைந்து போனாலும்
அவரால் வழி நடத்தப்பட்ட இளம் மந்திரவாதிகள்
மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
கணுவில் கட்டிய எருதுகள், கட்டிய கணுவில் முதுகை உரஞ்சுவதும் முட்டிப் பார்ப்பது
இயக்கை என்பதை மறந்து விடாதீர்கள்.

பட்டிக்காரனின் கம்பு சில நேரங்களில் அவனுக்கே கோலாவது கொடுமையிலும் கொடுமையப்பா..!
சண்டித் தனம் பிடித்த குதிரைக்கு
கடிவாளம் போடுவதற்கு மக்கள் துணிந்து விட்டதை உலகம் ஏன் இன்னும் புரிய வில்லை ?
வண்டியை இழுக்க மறுக்கும் எருதுக்கு கண்ணுக்குள் கொச்சிக்காய் போடும் பழக்கம் உள்ளவர்கள் கிழக்கிலங்கை மக்கள்.

தற்பொழுது வெல்ல நாரினால் மூக்கணாங் கயிறு திரித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் !
மக்களை ஏமாற்றலாம். ஆனால் அவர்கள் மாக்களாக வாழும் வரை
அதே மனிதர்கள், மனிதர்களாக விழிப்படைந்தால் எங்கும் மரங்கள் இருக்கவே மாட்டாது.
அங்கே மயில்கள் குடி இருப்பது திண்ணம்.

ஹஸனலியின் ஆளுமைக்கும் சிறப்புக்கும் மந்திரவாதி பதில் கூற முடியுமா?
எலி என்றும் எலிதான். அது ஒரு நாளும் கொம்புள்ள யாளியாக உரு எடுக்காது. இது உண்மை.
எந்தப் பூச்சாண்டியும் மக்களை ஏமாற்றவே முடியாது.காசிக்காகவும், ஜீப்புக்காக்கவும் போடாத ரோடுகளுக்கு கையேந்தி நிட்கின்ற காங்கிரஸ் அரசியல் வாதிகள் அழியட்டும்.
பாவம்.. ஜப்பார் அலியும் அவரது சகோதரர்களும் இந்த உண்மையை உணர்ந்து உருப்படியான அரசியல் செய்ய முன்வரட்டும்.

பூச்சாண்டி காட்டும் மந்திரவாதிகளே..
உங்கள் கைகளிலுள்ள கம்புகளையும் கோல்களையும் மறந்து விட்டு எதார்த்த நிலைக்கு வாருங்கள். 

–  கவிஞர் சட்டத்தரணி எஸ். முத்துமீரான்-