தடையுத்தரவு மாத்திரமல்ல வழக்கும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; அல்ஹம்துலில்லாஹ் : SM சபீஸ்

 
சுகாதார சிகிச்சை நிலையம் கட்டுவதற்காக என்னால் வழங்கப்பட்ட காணி வயல்காணி என்று மனித உருவம்கொண்ட அரவங்களால்   தொடர்ச்சியாக மொட்டைக்கடிதம் எழுதப்பட்டும் , நரகலை உண்ணும் மிருகத்துக்கு சமானான எழுத்தாளர்களாம் என்று சொல்லக்கூடிய ஒருசிலரால்   ஏற்படுத்தப்பட்ட மாயையிலும் விவசாய திணைக்கள அதிகாரிகளினால்  என்மீது வழக்கு தொடுத்து கட்டிடம் முடிவுறும் தறுவாயில் ஒருவாரத்துக்கு முன்னர்  தடை யுத்தரவு பெறப்பட்டது. 
 
எனது தந்தை அரசியல் படுகொலை செய்யப்பட்ட காலத்திலிருந்து எதுவேண்டுமென்றாலும் எதிர்நீச்சல் போட்டு தேவைகளை அடைந்ததே எனது வாழ்க்கையாக   கானப்படுகிறது அது எனது அரசியல்வாழ்கையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 
 
நான் வாழும் பிரதேசத்தில் வாசிகசாலை,பாடசாலை கட்டிடம் பாதைகள் இப்போது வைத்தியசாலை என எல்லாமே தடைகளையும் எதிர்ப்புக்களையும் தாண்டியே பெறப்பட்டுள்ளது.
 
40 மில்லியன் பெறுமதியான இடத்தில் 4  மில்லியன் பெறுமதியான கட்டிடத்தை கட்டுவதற்கு நாங்கள் ஆதரவில்லை அதேபோன்று 10 மில்லியன் பெறுமதியான ஒருகட்டிடம் கட்டுவதற்கு 4 மில்லியனுக்குமேல் பெறுமதியான  இடத்தினை மக்களுக்காக  கொடுக்கும் அளவிற்கு இறைவன் எங்களுக்கு போதுமான மன நிறைவை தந்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ்.
 
 ஒரு ஏழை குடும்பம் அனுபவிக்கும் துன்பங்களை நாங்கள் நன்கு  அறிந்தவர்கள்  எங்களது பகுதியில் கற்பிணி தாய்மார்களுக்கான சுகாதார வைத்திய நிலையம் இல்லாததனால் தாய்மார்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை நேரில் கண்டிருக்கிறேன். வசதி படைத்தவர்கள் தமது வீட்டில் சுகாதார சேவை வழங்குவதற்கு இடம்கொடுக்க மாட்டார்கள் காரணம் தமது வீட்டை ஏழைகள் அசிங்கபடுத்திவிடுவார்கள் என்று எண்ணுவார்கள். ஏழைகளின் வீட்டில் சுகாதார சேவை இடம்பெற்றாலும் அங்கு வருகின்ற சுமார் 20 ம் மேற்பட்ட கற்பிணி  தாய்மார்கள்  போதிய மலசலகூட  வசதியில்லாமல் தமது உணர்வுகளை அடக்கிக்கொண்டு இருக்கவேண்டிய நிலைதான் காணப்படும் இந்நிலையினை கருத்தில் கொண்டு சுகாதார நிலையம் அமைப்பதற்காக  அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட  நிதி போதியளவு இடவசதியின்மையினால் திரும்பும் நிலையில் எனக்கு சொந்தமான இடத்தினை மக்களுக்காக கொடுத்து கட்டிடம் கட்டுவதற்கு உதவினேன்.
 
ஆனால் மனநிலை பேதலித்த வக்கிரக்காரர்கள் தடை உத்தரவு பெறுவதற்கு துணை நின்றார்கள்  இறைவனின் தீர்ப்புக்கு முன்னால் அவர்கள்  தோற்று விட்டார்கள். 
இதற்குமேல்  நிதி அமைச்சிலிருந்து நிதியினை தடைசெய்தாலும் எங்களது பணத்தை கொண்டு  கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டு மக்களுக்காக வழங்கப்படும்.
 
சட்டத்தரணி பஹீஜ் அவர்களின்  கூர்மையான அறிவினையும் வாதத் திறமையையும் இன்று நீதிமன்றில் இருந்த அனைபேரும் அறிந்து கொண்டனர் அவரது வாதத்துக்கு முன்னால் தடையுத்தரவு மாத்திரமல்ல வழக்கும்  முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது  இறைவன் அவருக்கு நல்லருள் வழங்க பிரார்த்திக்கின்றேன்.
 
 
அதேபோன்று இக்கட்டிடத்தை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்த அனைபேரினதும் செயற்பாடுகளை நாங்கள் மறந்தும் மன்னித்தும் விட்டோம்  இவர்களுக்கும் இறைவன்  அருள்பாலிக்கட்டும் !