வாகன விபத்தினால் சில மணி நேர போக்குவரத்து பாதிப்பு !

க.கிஷாந்தன்

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.

கொட்டகலை பகுதியிலிருந்து பண்டாரவளை பகுதியை நோக்கி சென்ற மீன் லொறி ஒன்றும் நுவரெலியா பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்து 28.02.2017 அன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இவ்விபத்தில் இரு வாகனங்களிலும் சென்றவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் இவ்விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பிரதான வீதிகளை மூடும் அளவிற்கு பனிமூட்டங்கள் பரவியூள்ளது.

இந்த நிலையில் வீதிகளில் வழுக்கு தன்மையினால் வாகன விபத்துகள் அதிகரிக்க கூடும் எனவும், இதனை தவிர்த்துக் கொள்வதற்கு வாகன சாரதிகள் வாகனங்களை மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.