எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ரணை ஆணைக்­குழு சமர்ப்­பித்த அறிக்­கையில் குறை­பா­டுகள்..?

எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ரணை ஆணைக்­குழு சமர்ப்­பித்த அறிக்­கையில் குறை­பா­டுகள்,  தவ­றுகள் இருக்­கின்­றன.

அவற்றைக் கருத்திற் கொண்டு ஒரு மாத காலத்­துக்குள் எல்லை நிர்­ணய அறிக்கையை வர்த்­த­மானி அறி­வித்­தலில் வெளி­யி­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவின் சட்­டத்­த­ரணி தெரி­வித்தார்.

பெப்ரல் அமைப்பு உள்­ளூ­ராட்சித் தேர்தல் கால­தா­ம­தப்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ரா­கவும், விரைவில் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை நடாத்தும்படி உத்­த­ர­வி­டு­மாறும் கோரி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­தி­ருந்த மனு மீதான விசா­ரணை நேற்று இடம்­பெற்­றது.

இந்த விசா­ர­ணையின் போது மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி ரொமெஷ் டி சில்வா இவ்­வாறு தெரி­வித்தார்.

பெப்ரல் அமைப்பு தாக்கல் செய்­தி­ருந்த வழக்கில் பிர­தி­வா­தி­க­ளாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா, அமைச்சின் செய­லாளர், எல்லை நிர்­ணய முறைப்­பாட்டு விசா­ரணைக் குழு­வினர் ஆகியோர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் உரிய காலத்தில் நடாத்­தப்­ப­டாது கால தாமதப்படுத்தப்பட்டு வருவது ஜனநாகய உரிமை மீறல் என பெப்பரல் அமைப்பு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.