ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள் மூலம் இலங்கைக்கு சாதகமான நிலைமை உருவாகும் வாய்ப்புகள் காணப்படுகின்றன: தயான் ஜயதிலக்க

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானங்களின் சாதகத்தை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தற்போதைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கைகளில் எடுக்க வேண்டும் என முன்னாள் ராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் தீர்மானங்களை நாட்டுக்கு சாதகமாக மாற்றும் நிலைமை தற்போதைய வெளிவிவகார அமைச்சரிடம் காணப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் முடிவுகள் மூலம் இலங்கைக்கு சாதகமான நிலைமை உருவாகும் வாய்ப்புகள் காணப்படுகின்றன எனவும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே தயான் இதனை கூறியுள்ளார்.