“ஆமா” போடுகின்ற கோமாளிகளை வைத்து கட்சியை ஹக்கீம் உருட்டி வருகின்றார்

SLMC கட்சியைப் பொறுத்தவையில் பலரின் உயிர்த் தியாகங்களால் உருவானகட்சி.இன்று கட்சியில் தஞ்சமடைந்துள்ள பலர் கிடைத்த பதவிக்காகவும்,கிடைக்கவுள்ள பதவிகளுக்காகவும் போராளிகளாக காட்டி விளம்பரம் தேடுபவர்களே.

உண்மையான கட்சிப் போராளிகள் இன்று வாய் மூடிகளாக்கப்பட்டு அல்லது வெளியேற்றப்பட்டு சிலவியாபாரிகளின் கைகளில் கட்சி இடமாறி உள்ளது.
இன்று இருக்கின்ற பாதிப் பேர் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் பதவிகள் கிடைக்காத போது சமூகம் பற்றிப் பேசுவார்கள்.


உண்மையில் ஹகீமின் தலமைத்துவத்தில் பலகுறைபாடுகள் இருக்கலாம்.கட்சித் தலமை என்பது மிகக் கடினமானதும் சவால்களக்கும் உரியதாகும்.மர்ஹூம் அஸ்ரபின் மரணத்தின் பின்னர் பலர் கட்சியை துண்டாடவும்,ஏலமிடவும் முயன்றனர்.இருந்தும் இருக்கின்றவர்களை வைத்து கட்சியை ஏதோ ஒருகட்டத்தில் நிலையாக வைக்க ஹகீமின் சாதுரியம் பாராட்டத்தக்கது.

இருந்தும் இன்று கட்சியை விமர்சிக்கின்ற முன்னால் உறுப்பினர்கள் ஹகீமை விட மோசமானவர்களே.சமூகத்திற்கான கட்சியில் பதவியை வகித்தவர்கள்,வகிப்பவர்கள் சகலருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.அதுதான் சமூகத்தின் குரலாக இல்லாமல் கட்சி தடமாறுகின்ற போது துணிச்சலாக பேசுவது.பதவி மோகத்தால் வாய்மூடிகளாக இருப்பதும் ,,பதவி கிடைக்காதபோது சமூகவாதிகளாக மாறுவதும்,கட்சி மாறுவதும் தான் இவர்களின் சாணாக்கியம்.

உண்மையில் கடந்த மஹிந்த  ஆட்சிக்காலத்தில் கோடிக்கணக்கில் பணங்களை பாராளுமன்ற மற்றும் மாகாணசபை SLMC உறுப்பினர்கள் இலஞ்சமாக பெற்றனர்.18வது சட்டதிருத்தம்,திவிநெகும சட்டம்,நீதியரசர் மீதான குற்றபிரேரநை,வில்பத்து வர்த்தமானி விடயங்களிலும் பொதுபலசேனவின் செயற்பாடுகளிலும் SLMC அடிமையாகவே இருந்தது.

கிழக்கில் வந்து ஹகீம் என்ன கும்மாளம் போட்டாலும் மஹிந்தவினால் சாதாரண ஊழியனாகவே பார்க்கப்பட்டார். கேவலம் 2005ம் ஆண்டுக்குப் பின்னர் கட்சியை அடகுவைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.2005ம் ஆண்டுக்கு முன்னர் பேரம் பேசுகின்ற சக்தியாக இருந்த கட்சி வியாபாரக் கும்பல்கள் மற்றும் ,துரோகிகளின் கைகளுக்குள் மாறியது.

கட்சியின் அடிமட்ட மற்றும் அக்கறை சார்ந்தவர்களுக்கு கிழக்கில் ஒருபடமும் மேற்கில் ஒருபடமும் காட்டியே காலத்தை ஓட்டுகின்றனர்.மற்றைய இனத்தலைவர்கள் கேவலமாகப் பேசவும,ஏப்பம் விடவும் SLMC இன்று கோமாலிகளின் கூடாரமாக உள்ளது.

கட்சியில் கேள்வி கேட்பவர்கள்,நியாயத்தை முன்வைப்பவர்களுக்கு  எல்லாம் குழப்பவாதிகள் அல்லது துரோகிகள் என்று பட்டம் கிடைக்கும்.இன்று நேற்று கட்சிக்குள் வியாபாரம் மற்றும் சொந்த தேவைகளுக்காக இடம் பிடித்தவர்கள் சமூகம் பற்றியும்,போராளிகள் பற்றியும்பேசும் போது கேவலமாகவும் அருவறுப்பாகவும் உள்ளது.

சமூகத்தை அடகுவைத்து வாய் மூடிகளாக  இருப்பதற்காக பணத்தையும்,பதவிகளையும் பெற்று,அதற்கு நியாயம் கற்பிக்கும் இவர்கள் தான் துரோகிகள்.முஸ்லிம் சமூகம் ஆயுதம் ஏந்தினால் இந்த கட்சியில் பதவிகளால் அலங்காரம் செய்தவர்களே முதல் இலக்காக வேண்டும்.

கடந்த 12 வருடங்களில் சுமார் 10 வருடங்கள் ஆளும் கட்சியில் இருந்து சமூகத்திற்கு கிடைத்த பயன் என்ன.மர்ஹீம் அஸ்ரபின் கனவான ஒலுவில் துறைமுகம்,தென்கிழக்கு பல்கலைக்கழகம்,தனிஅலகு ,கல்முனையின் பல அரசநிறுவனங்கள் பறிபோய்விட்டது. பலகுட்சித் தலைவர்களும் உருவாகி கட்சிக்குள் பங்குச் சந்தை வியாபாரிகள் வருகையும் அதிகரித்து விட்டது.

ஹகீமின் தனிப்பட்ட தேவைகளுக்காக மஹிந்தவிடம் சமூகத்தை கட்சயினூடாக அடகுவைத்தனர்.ஆனால் மக்களிடம் ஆயிரம் பொய்யான சாணாக்கிய கருத்துக்கள்.குறிப்பாக கிழக்கு மாகாணமக்களை ஹகீமும் அவருடன் ஒட்டித் திரிகின்ற கிழக்கின் சில அடிவருடிகள் சீரழிக்கின்றனர்.

கட்சியானது பலசந்தரப்பங்களில் பல சவால்களே எதிர்கொண்டது.இருந்டாலும் தற்போது தலமைப்பீடம் மிகவும் பீதியடைந்துள்ளதை,அண்மைக்கால பேச்சுக்களின் மூலம் அறிய முடிகிறது.

கடந்த 2005ம் ஆண்டுக்குப் பின்னர் ஹகீமினதும்,அவரைச் சூழந்த வியாபாரக் கும்பல்களினதும் தேவைகளுக்காக கட்சி அடமானம் வைக்கப்பட்டது.ஆனால் கட்சியில் தனக்கு ஆமா போடுகின்ற கோமாளிகளை வைத்து கட்சியை ஹகீம் உருட்டி வருகின்றார்.

அதாவுள்ளாஹ்,றிசாத் போன்றவர்களின் கட்சிகளின் வளர்ச்சி,முஸ்லீம்கள் மீதான அடக்குமுறை ,முஸ்லீம் பிரதேசங்களில் பிரதேசவாதம் போன்றவை உருவாகுவதற்கு ஹகீமின் தனிப்பட்ட தேவைக்கான அடமானமாக கட்சி உள்ளதே காரணமாகும்.

அதேநேரம் ஹகீமின் தலமையை விமர்சிப்பவர்களை விட மாற்றம் வேண்டும் என்பவர்கள் குறைவு.காரணம் முஸ்லீம்களில் பொறுத்தமானதும் தனித்துவமிக்கதுமான தலமைத்துவம் ஹகீமைவிட அரிதாகவே உள்ளது.ஆகவே மிகவும் இக்கட்டானதும்,சூனியமிக்கதுமான சூழலில் இந்த சமூகம் சிக்குண்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மக்களை இன்னும் அறியாமையுள்ளவர்களாக ஹகீம் நடாத்துவது வேதனைக்குறியதாகும்.கட்சிப் பாடல்களைப் போட்டு,மோட்டர் பைசிக்களில் பவணிவந்து,வடிவேல் காமடி புரிவதற்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல.பலரின் உயிர்,உடமை மற்றும் கௌரவங்களுக்கு உண்டான இழப்புகளால் உருவான கட்சி.

போராளிகள் என்பது இப்போது காமடியாகிவிட்டது.ஆனால் SLMCன் உண்மையான போராளிகள் இன்னும் கட்சிக்காக விசுவாசமாக உள்ளனர்.தலமைத்துவம் என்பதற்கு அப்பால் சமூகத்திற்காக கட்சியை சீரமைக்கவேண்டும் என்பதில் உயிராக உள்ளனர்.
இருந்தும் கட்சிக்கு வெளியே நின்று கட்சியில் இருந்து உண்மையாகவே தூக்கிவீசப்பட்ட சிலர் தற்போது முதலக்கண்ணீர் வடிக்கின்றனர்.

கட்சியின் தலமைத்துவம் பல சமூகத்தின் துரோகங்களுக்கு துணைபோய் விட்டது.அதனால் கட்சயின் தலமைப்பீடம் தொடர்பில் எதிர்கால சந்ததியினருக்காக அவசியமான முடிவுகள் தேவையாக உள்ளது.தலமைத்துவத்தை மாற்றுவதால் உடனடி தீர்வுகள் வரமாட்டாது.ஏனெனில் வெளியில் இருக்கின்ற தலமைகள் மிகவும் ஆபத்தானவை.
ஆதலால் கட்சியின் பொறுப்பு வாயந்த பதவிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் அதற்கு கட்சியில் இருக்கின்ற ஆரோக்கியமும்,முற்போக்குமானவர்கள் முன்னிலைப்படுத்த வேண்டும்.ஹகீமின் பதவிக்காலத்துக்குள் தகுதியானதும்,சக்திமிக்கதுமான தலைவர் கட்சிக்குள்ளே உருவாக்கப்பட வேண்டும்.

FAHMY MOHAMED-UK
Political and Human Rights Researcher