இறந்து 20 வருடங்களுக்கு பிறகு இளவரசி டயானாவிற்கு லண்டனில் சிலை…

இங்கிலாந்து இளவரசர் சார்லசை காதல் திருமணம் செய்து கொண்டவர் டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சார்லசுடன் வாழ்ந்த போதே தான் வேறொருவரைக் காதலிப்பதாக அறிவித்தார் டயானா.இது இங்கிலாந்து அரச குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அறிவிப்பால், டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபெத் வற்புறுத்தினார்.
இளவரசர் சார்லசுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார்.  உலக அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் முதல் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டார்.
பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல்  டயானா தனது காதலர் டோடி பயத்துடன் டன் காரில் பயணம் செய்த போது, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேகமாகச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலியானார். 
அவரது மரணம் குறித்து இன்னும் மர்மம் விலகாத நிலையில், தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இளவரசி டயானா இறந்து 20 வருடங்கள் ஆன நிலையில், தற்போது அவரது சிலை நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டயானாவின் மகன்களான இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் இந்த செய்தியை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவரது மகன்கள் கூறுகையில், “எங்களுடைய தாய் பலருடைய இதயங்களை தொட்டுள்ளார். இந்த சிலை கென்சிங்டன் மாளிகைக்கு வருபவர்களுக்கு டயானாவின் வாழ்க்கை மற்றும் மரபினை நினைவு கூறும் என்று நம்புகிறோம்” என்றனர்.
சிலையை செய்யக்கூடிய சிற்பி யார் என்பது இதுவரை முடிவு செய்யப்பட வில்லை. சிலை அமைப்பதற்கான கமிட்டியில் டயானாவின் சகோதரி லேடி சரா மெக்கோயுடேல், நெருங்கிய நண்பர் ஜூலியா சமுவேல், அவரது முன்னாள் முதன்மை செயலாளர் ஜேமியி லூத்தர்-பின்கெதான் ஆகியோர் உள்ளனர்.