முஸ்­லிம்­கள் நூறு வீதம் வாழும் கெலி­ஓய நிவ்­எல்­பிட்­டிய எனும் பிர­தே­சத்தில் புத்தர் சிலை- பீதியில் மக்கள்

கண்டி மாவட்­டத்தைச் சேர்ந்த கெலி­ஓய நிவ்­எல்­பிட்­டிய எனும் பிர­தே­சத்தில் தக்­கியா ஒன்­றுக்குப் அருகி­லுள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான காணிக்கருகில் ஒதுக்­கப்­பட்­டுள்ள பகு­தியில் நேற்று முன்­தினம் இர­வோ­டி­ர­வாக பெரும்­பான்மை இனத்­த­வர்கள் புத்தர் சிலை­யொன்­றினைக் கொண்டு  வைத்­துள்­ள­மையால் அப்­ப­கு­தியைச் சேர்ந்த முஸ்­லிம்கள் பீதி­ய­டைந்­துள்­ளனர்.

முஸ்­லிம்­களே நூறு வீதம் வாழும் இப்­ப­கு­தியில், முஸ்­லிம்கள் அரு­கி­லுள்ள பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுடன் நல்­லு­ற­வுடன் வாழ்ந்­து­வரும் சூழ்­நி­லையில் இவ்­வாறு சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை இன முறு­கலை உரு­வாக்கும் நிகழ்­வாக அவர்கள் கரு­து­கின்­றனர்.

இது தொடர்பில் நிவ்­எல்­பிட்டி கிராம முஸ்­லிம்கள் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மிடம் முறை­யிட்­ட­த­னை­ய­டுத்து அமைச்சர் மத்­திய மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான பிரதி பொலிஸ் மா அதி­பரைத் தொடர்பு கொண்டு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்­டி­யுள்ளார்.

பேரா­தெ­னிய பொலிஸார் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்து புத்­தர்­சிலை வைத்து அதனைப் பாது­காத்து வரு­ப­வர்­க­ளுடன் நேற்று பேச்­சு­வார்த்தை நடத்­தினர். அனு­மதி பெற்றுக் கொள்­ளாது ஓர் இடத்தில் புத்­தர்­சிலை நிறுவ முடி­யாது என அவர்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்­தி­ய­துடன் சிலையை அகற்றிக் கொள்­ளு­மாறும் கோரிக்கை விடுத்­தனர்.

கோரிக்கை சம்­பந்­தப்­பட்­ட­வர்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, சிலை அகற்றிக் கொள்­ளப்­ப­டா­விட்டால் இன்று திங்­கட்­கி­ழமை நீதி­மன்ற உத்­த­ரவின் மூலம் சிலை அகற்­றப்­ப­டு­மென பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச் செய்தி அச்­சுக்குப் போகும்­வரை சிலை அகற்றிக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

குறிப்­பிட்ட காணியில் முஸ்­லிம்கள் பள்­ளி­வாசல் ஒன்று நிறுவ முயற்­சிப்­ப­தா­லேயே அவ்­வி­டத்தில் புத்தர் சிலை நிறு­வி­ய­தாக சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் பொலி­ஸா­ருக்குத் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உல­மாவின் உடு­நு­வர தொகு­திக்குப் பொறுப்­பான செய­லாளர் லாபிர் மௌல­வியைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார். இப்­ப­குதி முஸ்­லிம்கள் பொறுமை காக்­கும்­படி கேட்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வி­வ­கா­ரத்தை சுமு­க­மாக தீர்த்து கொள்­வ­தற்கு இருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பிட்ட காணியில் கடந்த சிங்­கள புது­வ­ருட நிகழ்­வாக இசைக் கச்­சேரி நடத்­து­வ­தற்கு பெரும்­பான்மை மக்­களால் அனு­மதி கோரப்­பட்­டது. என்­றாலும் முஸ்­லிம்கள் வாழும் பகுதி என்­பதால் அது மறுக்­கப்­பட்­டது. இத­னா­லேயே இக்­கா­ணியில் புத்­தர்­சிலை வைக்­கப்­பட்­டுள்­ள­தென கரு­து­கிறோம். குறிப்­பிட்ட காணி முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான காணி­யுடன் கூடிய ஒதுக்­கப்­பட்ட (Reservation) காணி­யாகும் என்றார்.

அனுமதி பெற்றுக் கொள்ளாது பலாத்காரமாக எவ்விடத்திலும் புத்தர்சிலை நிறுவ முடியாதெனவும் பொலிஸார் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.

இதே வேளை உடு­நு­வர பிர­தேச செய­லாளர் குறிப்­பிட்ட இடத்தில் வைக்­கப்­பட்­டுள்ள புத்தர் சிலை தொடர்­பாக பேரா­தெ­னிய பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்­ள­துடன் அச்­சி­லையை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த காணி அர­சாங்­கத்­தினால் ஒதுக்­கப்­பட்ட காணி­யாகும். இக் காணியை முஸ்லிம் ஒருவர் 2008 ஆம் ஆண்டு முதல் பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்­துக்கு வரி செலுத்தி உபயோகித்து வருகிறார்.

 

விடிவெள்ளி