கிரித்தலே முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் எக்னெலிகொட கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்..?

அரசியல் கேலிச்சித்திர செய்தியாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி எக்னெலிகொட, கடத்தப்பட்டு கிரித்தலே முகாமுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சீ.ஐ.டியினர் கண்டறிந்துள்ளனர்.

கொழும்பின் புறநகர் பத்தரமுல்லையில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி கடத்தப்பட்ட அவர், கொழும்பின் இடம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்

இதன்பின்னரே அவர் மின்னேரியா கிரித்தலே முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என சீ.ஐ.டியினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எக்னெலிகொடவின் மனைவி சந்தியா தமது கணவரின் நிலைக்குறித்து உரிய தகவல்களை வழங்கவேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.