கண்களின் களைப்பை போக்க….

கண்களின் களைப்பை போக்க உங்கள் கண் இமைகளின் மீது தினமும் மென்மையாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்ய ஏதாவது லோஷன் அல்லது ஆலிவ் ஆயிலை பயன்படுத்தலாம். கண் இமைகளில் மீது மிகவும் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது கண்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

மேலும் கண்களை சுற்றியுள்ள தசைகளை ஆசுவாசப்படுத்தும். அதே நேரம், கண்ணீர் சுரப்பிகளை ஊக்குவித்து, கண்கள் வறண்டு போவது தடுக்கப்படும்.

1. கண் இமைகளின் மீதும் புருவத்திற்கு மேலே தசைகளின் மீதும் உங்கள் விரல்களை கொண்டு 10-20 நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

2. கண் இமைகளுக்கு கீழ் உள்ள எலும்புகளின் மீது 10-20 நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

3. கன்னப்பொட்டு மற்றும் மேல் தாடையெலும்புகளின் மீதும் மசாஜ் செய்யுங்கள்.

4. இதனை தினமும் 1 அல்லது 2 முறை செய்யுங்கள். 

குறிப்பு: மசாஜ் செய்யும் போது சில துளி ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.