ஹரீஸ் மாலை தீவு சென்றது தேவையற்ற விடயமா ?

இப்றாஹிம் மன்சூர்

  அண்மைக் காலமாக அமைச்சர் ஹக்கீம் பிரதி அமைச்சர்  ஹரீஸை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.அண்மையில் காணாமல் போன கல்முனை மீனவர்கள் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின்  நன்றி நவிலல் அறிக்கையில் பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலை தீவு சென்றது தேவையற்ற விடயம் போன்று மறைமுகமாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் நன்றி தெரிவித்துள்ள நபர்களை அவதானிக்கும் போது இதனை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.அவரது அவ் அறிக்கையில் 

“காணாமல்போன மீனவர்களை மீட்டெடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைளை மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கடற்படைத் தளபதி, இலங்கையிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகர், மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் மீனவர்களை மீட்டெடுப்பதில் பக்கபலமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.”

மலைதீவு சென்ற பிரதி அமைச்சர் ஹரீஸ் குறித்த மீனவர்களின் மீட்பிற்காக பல மாலை தீவு முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார்.அமைச்சர் ஹக்கீமின்  நன்றி நவிலல் அறிக்கையில் மாலைதீவைச் சேர்ந்த எந்த முக்கியஸ்தர்களும் உள்ளடக்கப்படவில்லை.நன்றி என்பது குறித்த விடயத்தில் உதவி செய்தோரிற்கு கூறும் ஒன்றாகும்.அதில் மாலைதீவு முக்கியஸ்தர்கள் உள்ளடக்கப்படவில்லை என்றால் அவர்கள்,அமைச்சர் ஹக்கீம் குறித்த மீனவர்களை மீட்கும் விடயத்தில் அக்கறை காட்டிய போது,அவர்கள் நேரடியாக அமைச்சர் ஹக்கீமிற்கு உதவவில்லை என்ற செய்தியையே கூறுகிறது.அப்படியானால் ஹரீஸ் மாலைதீவு சென்றது வீணா? அதற்காக நான் இவ்விடயத்தில் மாலைதீவு அரசாங்கத்தின் உதவி இல்லை என கூறவில்லை.மாலைதீவு பிரதிநிதிகள் இலங்கை முக்கியஸ்தர்களின் (மு.கா முக்கியஸ்தர்கள் தவிர்ந்து) கோரிக்கைக்கு அமைவாகவே குறித்த விடயத்தில் செயற்பட்டுள்ளனர் என்பதே குறித்த அமைச்சர் ஹக்கீமின் நன்றி நவிலல் அறிக்கை கூறும் விடயமாகும்.

எனவே,அமைச்சர் ஹக்கீமின் நன்றி நவிலல் அறிக்கை ஹரீஸ் மாலைதீவு சென்றது படம் காட்டவே என்ற விடயத்தை மறைமுகமாக தெளிவாக கூறுகிறது.

அண்மைக் காலமாக பிரதி அமைச்சர் ஹரீஸை மு.காவின் எதிர்காலத் தலைவராக பலரும் வர்ணித்து வருகின்ற நிலையில் இது பிரதி அமைச்சர் ஹரீசிற்கு எதிராக ஹக்கீமினால் முன்னெடுக்கப்படும் ஊடகப் போராக இருக்கலாம் என்றே பெரிதும் நம்பப்படுகிறது.இருந்தாலும் ஒரு விடயத்தை செய்து கொடுக்கும் போது  உறுப்பினர்கள் தலைவருக்கு நன்றி சொல்வதே வழமை.இங்கு தலைவர் உறுப்பினருக்கு நன்றி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.