இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசா வழங்க தீர்மானம் :நிதி அமைச்சர்

இலங்கையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசா வழங்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் குறைந்தது 3 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்ளுக்கே வதிவிட விசா வழங்கப்படும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

அவ்வாறு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 2 தொடக்கம் 5 வருட வதிவிட விசா வழங்கி வைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு இணங்கவே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.