அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பிரத்யேக “ஏர் போர்ஸ் ஒன்“ விமானத்தில் கடைசிப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் வரும் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இன்று சிக்காகோ பயணம் செய்த அவர், அங்கு அதிபராக தனது இறுதி உரையை ஆற்றினார். பின்னர், அமெரிக்க அதிபர்களுக்கான பிரத்யேக “ஏர் போர்ஸ் ஒன்“ எனும் விமானத்தில் வெள்ளை மாளிகை திரும்பினார். இந்த விமானத்தில் அவர் பயணம் செய்வது இதுவே கடைசிமுறை ஆகும். 
அமெரிக்க அதிபர்கள் பயணம் செய்வதற்கான பிரத்யேகமாக “ஏர் போர்ஸ் ஒன்“ எனும் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல அதிநவீன வசதிகள் அடங்கியுள்ளன. இந்த விமானத்தில், அதிபராக ஒபாமா 445 முறை பயண்ம் செய்துள்ளார். 2799 மணி நேரம் அவரை சுமந்து பயணித்துள்ளது
கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஒபாமா, பதவிக்காலம் முடிந்த பின்னர் இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும் ஒன்பது நாள்களில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி வேறு இல்லத்திற்கு குடிபெயர்ந்து செல்வார்.
அமெரிக்காவின் 44-வது அதிபராக டொனால்டு டிரம்ப் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.