பத்திரிகைப் பேரவை தெற்காசிய நாடுகளிலும் அவுஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளிலும் மிகத் திறம்பட செயற்பட்டு வருகின்றன

அஷ்ரப். ஏ. சமத்

இலங்கை பத்திரிகைப்  பேரவையை  கலைத்துவிடும்படி பல்கலைக்கழகங்களில் உள்ள சில ஊடக சம்பந்தப்பட்ட விரிவுரையாளா்கள்  அளுத்தம் கொடுத்து அறிக்கையும் சமா்ப்பித்துள்ளனா்..  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இந் நிறுவனத்தை ஒருபோதும் கலைப்பதில்லை என உறுதிப்படக் கூறியுள்ளாா். ஜனாதிபதியினால்  நியமிக்கப்பட்ட தலைவா் மற்றும்  பணிப்பாளா் சபை உறுப்பிணா்களே இந்த பேரவையில் உள்ளனா்.  என இலங்கை பத்திரிகைப் பேரவையின் தலைவா் சட்டத்தரணி கொக்கல வெலல பந்துல தெரிவித்தாா்.
இலங்கை பத்திரிகைப் பேரவையில் இன்று (10) நடைபெற்ற ஊடகடவியலாளா் மாநாட்டின்போதே பேரவையின் தலைவா்  கொக்கல பந்துல மேற் கண்டவாறு தெரிவித்தாா்.  இம் ஊடக மாநாட்டில் பேரவையின் பணிப்பாளா் சபை உறுப்பிணா்களும் கருத்து தெரிவித்தனா். 
அவா் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
பத்திரிகைப் பேரவை தெற்காசிய நாடுகளிலும்  மற்றும் அவுஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளில் மிகத் திறம்பட செயற்பட்டு வருகின்றன. அன்மையில் சாக் நாடுகளின் இலங்கை பத்திரிகை பேரவை மாநாடும் இந்தியாவில்  நடைபெற்றது.  இந் நிலையில் கடந்த 1973ஆம் ஆண்டு இல 05 கொண்ட பாராளுமன்ற சட்டத்தின் மூலம்  இந்தப் பேரவை உருவாக்கப்பட்டது.   இந் நிறுவனத்தினை  சிலா் கலைத்துவிடுவதற்கு முயற்சிக்கின்றனா்.   இலங்கையில் வெளிவரும் பத்திரிகைகளில் பொதுமக்களுக்கு பத்திரிகையின் செய்தி ஒன்றினால் ஏற்பட்ட பாதிப்பு, மற்றும்  பிரச்சினைகள் , தணிப்பட்ட ஒருவரை சித்தரித்து மன உழைச்சலை ஏற்படுத்திய  செய்திகள்  பிழையான செய்திகளை மீளப் பிரசுரித்தல், பத்திரிகை ஆசிரியா்  பத்திரிகைப் பேரவைக்கு சமா்ப்பித்த முறைப்பாடு போன்ற பல  பிரச்சினைகளை சுகுமான சமாதானமாக தீா்த்து வைத்தல்  போன்ற  செயற்பாடுகளை இப்  பேரவை செயல்படுத்தி வருகின்றது. 
அத்துடன் வருடாந்தம்  ஊடகவியலாளா் டிப்ளோமா பயிற்சி நெறியையும் நடாத்தி வருகின்றது. கடந்த  வருடம் எமது பயிற்சியை புரணப்படுத்திய ஊடகவியலாளா்களுக்கு ஜனாதிபதியினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. 2016 ஆண்டு மட்டும் 105 பத்திரிகை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று 10 க்கு தீா்வு பெற்று சமாதாண வழியில் தீா்க்கப்பட்டது. மேலும் 53 முறைப்பாடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. இவ்வாறன பிரச்சினைகளை நீதிமன்றம் சென்று வருடக்கணக்கிலும் இலச்சக்கணக்கான பணம் செலவு செய்யாது இலகுவாக  பொதுமக்கள் சேவைசெய்யும் ஒரு நிறுவனமாகும். இந் நிறுவனத்தினை கலைப்தென்றால் பாராளுமன்றம், சட்ட அலுவலகம். போன்றவற்றினாலேயே முடியும். சிலா் இந் நிறுவனத்தினை கலைத்துவிட்டு சில ஊடக என்.ஜி.ஓ போன்று செயற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனா் எனவும்  இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் தலைவா்  பந்துல தெரிவித்தாா்.
மேலும் இந் நிறுவனத்தின் ஊடாக வெப்தளங்கள், இலக்ரோணிக் ஊடகம் போன்ற  பொதுமக்கள் குறைபாடுகளை நிவா்த்தி செய்வதற்கும் எமது  பேரவையின் சட்டத்திருத்தம் செய்து அதற்கான உரிமையையும் பெற்றுக் கொள்ள உள்ளது.