தேர்­தலை நடத்தும் அதி­காரம் எமக்கு இல்லை : மஹிந்த தேசப்­பி­ரிய

உள்­ளூ­ராட்சி  சபைத் தேர்­தலை நடத்­தாது அர­சாங்கம் காலத்தை கடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செயற்­பா­டாகும்.

ஆகவே வெகு­வி­ரைவில் அர­சாங்கம் தேர்­தலை நடத்த வேண்டும் என சுயா­தீன தேர்­தல்கள் ஆணை­ய­கத்தின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். 

தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற கருத்­த­ரங்­கின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்த வேண்டும் என சகல அர­சியல் கட்­சி­களும் கூறு­கின்­றன. தினமும் ஒரு  கட்­சி­யேனும் தேர்­தல்கள் திணைக்­க­ளத்தை வந்த வண்­ணமே உள்­ளன. எனினும் இவர்கள் எம்­மிடம் வந்து வலி­யு­றுத்­தி­னாலும் தேர்­தலை நடத்தும் அதி­காரம் எம்­மிடம் இல்லை.

மக்கள் வரம்­பெற்ற பாரா­ளு­மன்­றமே தேர்­தலை எப்­போது நடத்­து­வது என தீர்­மா­னிக்க வேண்டும். எனினும் பாரா­ளு­மன்றம் அந்த அதி­கா­ரத்தை உள்­ளூ­ராட்சி சபைகள் மற்றும் மாகா­ண­ச­பைகள் அமைச்­சிடம்  ஒப்­ப­டைத்­துள்­ளது. ஆகவே அமைச்சர் தான் தேர்­தலை நடத்­து­வது தொடர்பில் தீர்­மா­னிக்க வேண்டும்.  

அவ்­வாறு இருக்­கையில் தேர்­தல்கள் ஆணை­ய­கத்­துக்கு தேர்­தலை நடத்தும் அதி­காரம் இல்லை. சுயா­தீன ஆணைக்­கு­ழு­வாக கூறி­னாலும் தேர்­தலை நடத்தும் அதி­காரம் எமக்கு இல்லை. உலகில் எந்­த­வொரு தேர்­தல்கள் திணைக்­க­ளத்­திற்கும் அந்த அதி­கா­ரத்தை வழங்­கி­யில்லை. 

ஆனால் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­தப்­ப­டாது காலத்தை கடத்­து­வது ஜன­நா­ய­கத்தை மீறும் செய­லாகும். குறித்த காலத்­தினுள்   அர­சாங்கம் தேர்­தலை நடத்­தாது உள்­ளதை நாமும் விரும்­ப­வில்லை.

வெகு விரைவில் அர­சாங்கம் தேர்­தலை நடத்தி மக்­களின் ஜன­நா­ய­கத்தை பாது­காக்க வேண்டும். காலத்தை கடத்தி ஜன­நா­ய­கத்தை மீறும் நட­வ­டிக்­கையை அர­சாங்கம் மேற்­கொள்­ளக்­கூ­டாது என்றார்.