அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் பிரதமரின் மகன் தெரிவிப்பு

அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் மகன் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அழுத்தத்தை கொடுத்து தங்களது நலன்களுக்கு சாதகமாக அரசியல்வாதிகள் நடந்து கொள்கின்றனர் எனவே தான் அரசியலில் ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பெற்றுக் கொள்ளும் சம்பளத்தில் தான் வாழவில்லை. குறித்த சம்பளத்தை உதவி தொகையாகயாக கல்வி நடவடிக்கைக்காக பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மறைந்த எனது தந்தை அரசியலில் தங்கியிருக்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.

பணம் மற்றும் பிற சலுகைகளை பெற்றுக்கொள்ள அரசியல் சரியான வழியாக இருக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் குடும்ப அரசியலை ஸ்திரப்படுத்திக் கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விதுர விக்ரமநாயக்கவின் அறிவிப்பு பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.