அமைச்சினால் தயாரிக்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான உறுதியுரை அனைத்து அரச நிறுவனங்களிலும் பிரகடனப்படுத்தப்படும்

அஷ்ரப் ஏ சமத்
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம் ஜனவரி 08 – 14ஆம் திகதி வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நாடு முழுவதிலும் அமைச்சுக்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில்  பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. என  ஜனவரி 9ஆம் திகதி கொழும்பில் ரோயல் கல்லுாாியில் தேசிய ஒருங்கினைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தின் பாடசாலை மாணவா்களுக்கிடையிலேயே நிகழ்வுகள்  நடைபெறவுள்ளது  என  தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தாா்.
அமைச்சின் செயலாளா் வே.சிவஞானசோதி மேலும் தகவல் தருகையில் 
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடா்பான விடயங்கள் பொறுப்பு அமைச்சரவை அமைச்சா் என்றவகையில்  அதிமேதகு ஜனாதிபதியால் 2016 டிசம்பா் மாதம் 05 ஆம் திகதி  சமா்ப்பிக்கப்பட்ட  அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு கிடைத்த அமைச்சரவையின்  அனுமதியின்படி  நாடு புராவும்  செயற்படுத்துமுகமாக  தேசிய  ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தினை  நிலைநாட்டுவதற்கான நிகழ்ச்சித் திட்டத் தொடா்  பிரகடனபடுத்தப்பட்டு 2017.01.08ஆம் திகதி தொடக்கம் 2017.01.14 வரையான வாரத்தினுள் செயற்படுத்தப்படும். 

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான குறிக்கோள் சமாதானத்துடன்கூடிய வலுவான உரையாடல்கள் மாத்திரமின்றி, வளமிக்க தேசமொன்றை கட்டியெழுப்புவதற்கான தன்னளவிலான பங்களிப்புக்களை ஊக்கத்துடன் வழங்குகின்ற மக்களிடையே சாந்தி , சமாதானம், அன்பு கருணை மற்றும் சகோதரத்துவம்,  ஆகியவற்றை விருத்தி செய்வதுடன் பல்லின மக்களிடையே புரிந்துணா்வையும் நம்பிக்கையும் உறுதிபடுத்துவதாகும்.  இதன் பிரதான நிகழ்வாக அமைச்சினால் தயாரிக்கப்பட்ட நல்லிணக்கம் தொடா்பான உறுதியுரை அனைத்து அரச நிறுவனங்களிலும் பிரகடனப்படுத்தப்படும். 

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கக அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவா்களை அமைச்சராகவும் இராஜாங்க அமைச்சா்ராக.எச்.எம். பௌசியையும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவை தலைவியாகக் கொண்டு தேசிய ஒருங்கிணைபபு மற்றம் நல்லிணக்க அலுவலகமும் இயங்கி வருகின்றது.  தேசிய ஒருங்கினைப்பிண் முக்கியத்துவத்தை பறைசாற்றுகின்ற இத் தேசிய வாரத்தினுள் நாடு புராவுமுள்ள அனைத்துப் பாடசாலைகளைக் கட்டிடங்களிலும் வகுப்பறைகளிலும் மாணவா்கள் தேசிய  ஒருங்கிணைப்பு தொடா்பாக உரையாற்றுவதற்கு ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலளாா்ருக்கும் மகாணக்கல்விப் பணிப்பளாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அடையாள நிகழ்ச்சித் திட்டங்கள் சில கொழும்பு ரோயல் கல்லுாாி,  ஆனாந்தாக் கல்லுாாி,  விவேகானாந்தாக் கல்லுாாி,  பாத்திமா மகளிா் கல்லுாாி,  விசாக்கா வித்தியாலயங்களில் 2017.01.09, 10, 11 திகதிகளிலும் 16ஆம் திகதி ஹாட்லி கல்லுாாி,  வட்டுக்கோட்டை இந்துக் கல்லுாாிகளிலும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி  இரு  
நிகழ்ச்சிகள் நடாத்துவதற்கு ஓழுங்கமைப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளா் அங்கு  தெரிவித்தாா்
இதற்கு மேலதிகமாக  கலை,கலாச்சாரம், இசை, நாடகம், திரைப்படம் தயாரிப்பு அத்துடன் இந்திய அரசினால் 3000 மழை நீர் தேக்கி வைக்கும் நீா்த் தாங்கிகள் வடக்கு மக்களுக்கு பகிா்ந்தளிக்கப்படும். ஏற்கனவே   கல்வியமைச்சு, சிறுவா் மகளிா் விவகார அமைச்சு, பதிவாளா் திணைக்களம், இறப்பு பிறப்பு, அடையாள அட்டை வழங்குதல் போன்ற அரச திணைக்களங்கள் ஊடாக வடக்கில் பல்வேறு திட்டங்கள்  அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் சிங்களவா், தமிழா் முஸ்லீம் என்ற இன வகுப்பு மத  பாகுபாடுகள் , மொழி, கலை கலாச்சாரம்ங்கள் தவிா்ந்து  சகலரும் இலங்கையா் என்ற ரீதியில் இந்த நாட்டில் இன ஜக்கியத்தை கட்டியெழுப்புதல்,  வடக்கு சிவில் சமுகம் தெற்குக்கும் தெற்கு சிவில் சமுகங்கள் வடக்கும் அழைத்துச் செல்லப்பட்டு பல்லின புரிந்துணா்வுகளை கட்டியெழுப்பப்படும். என அமைச்சின் செயலாளா் சிவஞானஜோதி தெரிவித்தாா்.
இராஜாங்க அமைச்சின் செயலளாா் எம்.எம் சுகையிர் பணிப்பளா் டிம் ஜெயசிங்கவும் இங்கு கருத்துக்களை வெளியிட்டனா்