சிறப்பு அம்பியூலன்ஸ் வாகனம் மூலம் நீதிமன்றம் வந்த துமிந்த சில்வா

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்றைய தினம் (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

file image

இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்வதற்காக சிறப்பு அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால், துமிந்த சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்குகள் தொடர்பிலேயே அவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சொத்துக்கள் தொடர்பான விபரங்களை கடந்த 3 வருடங்களாக சமர்பிக்க தவறியமை காரணமாகவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ருப்பினும், கடும் சுகயீனம் காரணமாக அம்பியூலன்ஸ் வாகனத்தை விட்டு துமிந்த சில்வாவினால் இறங்க இயலாது என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனவே, துமிந்த இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை. சந்தேகநபர் நீதிமன்ற வளாகத்தில் அம்பியூலன்ஸ் வாகனத்தில் இருந்துள்ளார் எனவே துமிந்தவுக்கு எதிரான வழக்கு இந்த மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.