சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டை விட 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது

சவூதி அரேபியாவில் கடந்த வருடத்தில் மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சட்டங்களை மீறிய குற்றத்திற்காகவே இவர்களுக்கு இந்த  தண்டணையை சவூதி அரசு கொடுத்துள்ளது.

இந்த தகவலை சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட காரணங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆம் ஆண்டில் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.