நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்த்து காட்­டு­மாறு மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பிர­தமர் ரணில் சவால் !

இம்­மாதம் நடுப்­ப­கு­தியில் ஒரு வாரம் நான் வெளி­நாட்­டிற்கு செல்­ல­வுள்ளேன். இந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி, முடி­யு­மானால் நல்­லாட்சி அர­சாங்­கத்தை கவிழ்த்து காட்­டு­மாறு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு பிர­தமர் ரணில்  சவால் விடுத்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் புது வருட கொண்­டாட்டம் நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்­றது.

இதன்­போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் முன்­னி­லையில் நகைச்­சுவைப் பாங்கில் கருத்து தெரி­விக்கும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

2017 ஆம் ஆண்டு புது­வ­ருட கொண்­டாட்டம் நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்­றது.

இந்த நிகழ்­விற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தாஸ, ரவி கரு­ணா­நா­யக்க, ராஜித்த சேனா­ரத்ன, மலிக் சம­ர­விக்­கி­ரம, அகில விராஜ் காரி­ய­வசம்,தயா கமகே, எம்.எச்.ஏ ஹலீம் உள்­ளிட்­ட­வர்­களும் தமிழ் முற்­போக்கு முன்­னணி சார்­பாக அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், பி. திகாம்­பரம், இரா­ஜாங்க அமைச்சர் வீ. இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன், இரா­ஜாங்க அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இலங்­ககோன் உட்­பட பல பிர­மு­கர்கள் கலந்து கொண்­டனர். 

இந்­நி­கழ்­விற்கு அலரி மாளிகை, பிர­தமர் அலு­வ­லகம், சிறி­கொத்­தாவில் பணி­பு­ரியும் ஊழி­யர்­களும் கலந்து சிறப்­பித்­தனர்.

இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வைப­வத்­திற்கு வருகை தந்த பல­ருடன் சுமு­க­மாக கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்டார். அத்­துடன் பல­ருடனும் செல்பி எடுத்­து­கொண்டார். ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­க­டனும் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டார். மேலும் வருகை தந்­தி­ருந்த அனை­வரும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் புத்­தாண்டு வாழ்த்­து­களை பரி­மா­றிக்­கொண்­டனர். 

அலரி மாளி­கையில் காலை 8.40 மணி­ய­ளவில் வைபவம் ஆரம்­பா­னது. இதன்­போது பாற்­சோறு பரி­மா­றப்­பட்டு புது­வ­ருடம் கொண்­டா­டப்­பட்­டது. 

இதன்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ 2017 ஆம் ஆண்டு ஆட்­சியை கவிழ்ப்­ப­தாக கூறி­யி­ருந்தார்.

இதற்கு பிர­த­மரின் பதில் என்ன என்று வின­வினார். இதற்கு பதி­ல­ளிக்கும் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பி­டு­கையில் ,முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு ஆட்­சியை கவிழ்க்க முடி­யு­மானால் இம்­மா­தம 16 ஆம் திக­தி­ய­ளவில் நான் வெளி­நாடு செல்­லத்­திட்­ட­மிட்­டுள்ளோம்.

இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி முடி­யு­மானால் ஆட்­சியை கவிழ்த்து காட்­டட்டும் என்று சவால் விடுத்தார்.