மகிந்த ராஜபக்ஸ தனக்கு 981 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார் : ரவி குற்றச்சாட்டு

இலங்கையில் ஜனாதிபதிகள் கடந்த மூன்று வருடங்களில் வரவு செலவுத்திட்டங்கள் ஊடாக தமது நிர்வாகத்திற்கு ஒதுக்கிக்கொண்ட நிதி தொகை தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் 2016, 2017 ஆண்டுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒதுக்கிக்கொண்ட நிதி ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது.

mahinda rajapakse

2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 2 ஆயிரத்து 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் முன்னாள் ஜனாதிபதியின் கீழ் இருந்த நிறுவனங்களுக்கு 48 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், மகிந்த ராஜபக்ஸ தனக்கு 981 பில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதியே நிதியமைச்சராகவும் பதவி வகித்தார்.

எவ்வாறாயினும் 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 389 பில்லியன் ஓதுக்கப்பட்டது.

அது முழு அரச செலவான 3 ஆயிரத்து 50 பில்லியன் ரூபாவில் 13 வீதமாகும். இதேவேளை 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் உள்ள நிறுவனம் மற்றும் அவரது செலவுக்காக அரச செலவில் 14 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது