சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்ட விவகாரம்: சுப்ரீம் கோர்ட் விசாரிக்க ஒவைசி கோரிக்கை

மத்தியபிரதேசத்தில் 8 ‘சிமி’ தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி ஐதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதேகாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுத்தின் ஒவைசி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

assarudeen owaisi uvaisi
‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்தியபிரதேச உள்துறை மந்திரி கூறுவதற்கும், போலீசார் கூறுவதற்கும் இடையே நிறைய முரண்பாடுகள் உள்ளன. அந்த 8 பேரும் ஸ்பூனையே ஆயுதமாக பயன்படுத்தியதாக, உள்துறை மந்திரி கூறியுள்ளார்.

அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ள தீவிரவாத தடுப்பு படை போலீசார், ஸ்பூன் வைத்திருப்பவர்களை பாய்ந்து அமுக்கி விடலாமே? எதற்காக சுட வேண்டும்?

மேலும், கொல்லப்பட்டவர்கள் கை கடிகாரம், ஷூ, பெல்ட் ஆகியவற்றை அணிந்துள்ளனர். ஜெயிலில் அந்த பொருட்களுக்கு அனுமதி இல்லாதநிலையில், அங்கிருந்து தப்பியவர்கள் அவற்றை அணிந்து இருந்தது எப்படி? எனவே, இவை எல்லாம் நம்பும்படி இல்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தினால்தான், முழு உண்மைகளும் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.