முன்னாள் தவிசாளர் ஒருவரின் பித்தலாட்டம் அம்பலம்

robber-png-0

 

 அக்கரைப்பற்று முன்னாள் தவிசாளராக இருந்த ஒருவர் பல களவுகளுக்கு பெயர் போனவர், இவரது கொள்ளைகளில் பிரதானமாக காணிகளை வளைத்துப்போடல், மக்கள் வரிப்பணத்தினை சுருட்டுதல், மக்களுக்காக வழங்கப்பட்ட மாடு , கோழிகளை தனது உடமையாக்குதல் , சபை சொத்துக்களை திருட்டுத்தனமாக வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்தல், சபை சொத்துக்களை கபளீகரம் செய்து குறைந்த விலையில் விற்று தனது பினாமி மூலம் தனது உடமையாக்குதல் என கூறிக்கொண்டே போகலாம் .

அண்மையில் பாரிய மணல் கொள்ளையில் சம்பத்தப்பட்ட இவர் தனக்கு சாதகமாக்குவதற்காக தனது சுய நல அரசியலை எப்படி வேண்டுமென்றாலும் பாவிப்பர்.

இவரது பதவிக்காலத்தில் வெள்ளைப்பாதுகாப்பு வீதிக்கருகாமையில் காணிச்சொந்தக்காரர்கள் உயிரோடு இருக்கும் போது களவில் உறுதி முடித்து தனது காடையர்களை கொண்டு வேலி போட்டு நல்ல விலைக்கு விற்று பணம் பார்த்தார் அதேபோன்று பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையிலும் நாடகம் நடந்தேறியது.

அஸ் சிராஜ் மகாவித்தியாலயத்துக்கு அருகாமையில் ஒரு ஏழையின் காணியை அபகரிக்கப்போய் பலத்த சண்டைகளுக்கும் பல துண்டுப்பிரசுரங்களுக்கும் மத்தில் களவு பிடிபட்டு மூக்குடைந்தார்.

14470702_340951866240744_2079294281_n_fotor

 

இப்போது பழைய களவுகளில் ஒன்று புதிதாக வெளியேறியுள்ளது இது புற்றுநோய் வெளியே வருவது போன்று அதாவது , தான் அதிகாரத்தில் இருக்கும் போது அம்பாறை வீதி பள்ளிக்குடியிருப்பில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு பின்னால் உருதிப்பூமிக்கு பேமிட் போட்டுள்ளார்கள். இரு தினக்களுக்கு முன் வயல்காணிக்குள் திடிரென சுற்றுமதில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனை அறிந்த பொதுமக்கள் கிராம உத்தியோகத்தருக்கு தகவல் கொடுக்க அவர் பிரதேச செயலாளரிடம் முறையிட்டுள்ளார்,

பிரதேச செயலாளர் கிராம நிலதாரியை இவ்விடயத்தில் தலையிட வேண்டாம் என பணிப்புரை வழங்கியுள்ளார் . என்ன கதிகாலம் களவுக்கு யாராரெல்லாம் உடந்தையாக இருக்கின்றனர் என்ற மனக்கவலையுடன் கிராம உத்தியோகத்தர் வீடு திரும்பி உள்ளார்

மக்களே உங்கள் உறுதிகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள் நாளை உங்களுக்கும் இந்நிலை வரலாம்.

 

எம்.ஸம்ஸி