தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் ரூ.5400 கோடி வருமானம் இழந்த டிரம்ப்!

trumpஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கோடீசுவரரான இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். தேர்தலில் போட்டியிடுவதால் கடந்த ஒரு வருடமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதனால் அவர் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை சரிவர கவனிக்க முடியவில்லை.

அதனால் கடந்த ஒரு வருடத்தில் அவரது வருமானம் ரூ.5400 கோடி குறைந்துள்ளது. இத்தகவலை பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப் விற்பனைக்காக 28 கட்டிடங்கள் கட்டினார். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் ‘பிசி’ ஆக இருப்பதால் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் அவற்றில் மேன்ஹாட்டனில் உள்ள 18 கட்டிடங்கள் எதிர் பார்த்த அளவில் விலைக்கு விற்கவில்லை.

அதே நேரத்தில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிக உயரமான 7 கட்டிடங்கள் அதிக விலைக்கு விற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் டிரம்ப்பின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பின் சரிவு இந்த அளவுக்கு குறைவாக இருந்ததில்லை.