அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆன்டிமுர்ரே, செரீனா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டிமுர்ரே 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசு வீரர் ரோசோலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

வாங்ரிஸ்கா (சுவிட்சர்லாந்து), நிஷிகோரி (ஜப்பான்) ஸ்டீவ் ஜான்சன் (அமெரிக்க) ஆகியோரும் 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராஙகனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் ரஷியாவின் மகரோவாவை எதிர்கொண்டார். இதில் செரீனா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.