சாய்ந்தமருது தோணா அபிவிருத்திப்பணிகள் ஆரம்பம்!

 

2_Fotor

எம்.வை.அமீர் 

சாய்ந்தமருதில் பேசப்படும் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்படும் சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற மக்களின் ஆதங்கத்துக்கான ஆரம்ப முன்னெடுப்பு 2015-05-15 ல் காலடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட வேலைகளுக்காக சுமார் 30 மில்லியல் ரூபாய்களை ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் ஒதுக்கீடு செய்து, குறித்த அமைச்சின் காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குனரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர் பைசால் காசீம் மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல்,ஆரீப் சம்சுதீன்,கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், கல்முனை மாநகரசபையின் பிரதிமுதல்வர் அப்துல் மஜீத் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர்,எம்.ஐ.எம்.பிரதௌஸ்,ஏ.நஸார்டீன், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.எச்.எம்.சல்மான் அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களது இணைப்பாளர் றஹுமத் மன்சூர்,சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினர், மற்றும் ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளர் யஹ்யாக் கான்,சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளர் ஜலால்  போன்றோரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சின் உயர் அதிகாரிகளும் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

1_Fotor 8_Fotor 9_Fotor DSC_0758_Fotor