மஹிந்தவின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் பெருந்தொகை பணத்தை நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த காலங்களில் ராஜபக்சர்கள், உகாண்டா, தாய்லாந்து மற்றும் ஜப்பானுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த விஜயத்தின் பின்னர் பெருந்தொகை பணத்தை நாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளிலுள்ள இலங்கை மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பல மில்லியன் டொலர்கள் பணமாக கிடைப்பதாக காட்டிக் கொள்ளப்படுகிறது. இந்த பணம் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக ராஜபக்ஷர்களால் காரணம் சொல்லப்படுகிறது.

கடந்த ஆட்சியின் போது தவறான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பணம், வெளிநாடுகளில் வைப்பு செய்து மீண்டும், அதனை சட்டரீதியான பணமாக கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு இடையிலேயே ராஜபக்சர்களின் வெளிநாட்டு விஜயத்திற்காக வெளியுறவு அமைச்சினால் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடக் இந்த நாட்டு ஹோல்சிம் சிமெந்மு நிறுவனத்தை விலைக்கு வாங்குவதற்காக நந்தன லொக்குவிதான எனப்படும் வர்த்தகர் 400 மில்லியன் டொலர் ஏலம் வைப்பது தொடர்பிலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிந்து கொள்ள முடிந்தன.

நந்தன லொக்குவித்தான என்பவர் டுபாய் மெரியட் ஹோட்டலை விலைக்கு பெற்றுக்கொண்ட நபராகும். அவர் பணம் சம்பாதிக்கும் முறை தொடர்பில் தற்போது வரையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவரால் முதலீடு செய்யப்படும் பணம் ராஜபக்சர்களினால் இந்த நாட்டில் கொள்ளையடிக்கபப்ட்டு வெளிநாடுகளில் வைப்பு செய்யப்பட்டுள்ள பணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாகும்.

ஹோல்சிம் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அந்த வர்த்தக நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் எதிர்பார்த்த 180 மில்லியன் டொலர் ஏலத்தை விடவும் இரண்டு மடங்கு அதிகமான ஏலம் ஒன்றினை சீன நிறுவனம் சமர்ப்பித்திருந்த நிலையில் அதனை விடவும் அதிகமான ஏலம் ஒன்றை லொக்குவித்தான சமர்ப்பித்திருந்தார்.

எப்படியிருப்பினும் விரைவில் மஹிந்த ராஜபக்ச தென் கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்ள தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.