தேசிய பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்படும் – நிதி அமைச்சர்

தேசிய பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிலர் ஓர் மாயை உருவாக்க முயற்சிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
நிறந் தீட்டப்பட்ட ஓர் பொருளாதாரத்தை எதிர்பார்க்ககக் கூடாது எனவும் தேசிய ரீதியான ஒர் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தை விடவும் தற்போது மக்களின் வாழ்க்கைச் செலவினை குறைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 
வாழ்க்கைச் செலவிற்கு ஒப்பீட்டளவில் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மானிப்பதற்கு 28200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அதன் வருமானம் 300 மில்லியன் ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
ஹம்பாந்தோட்டை சூரியவௌ மைதானத்தை அமைப்பதற்கு 4500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், மதிப்பீடுகளின் போது இந்த மைதானத்திற்கான மொத்த செலவு 852 மில்லியன் ரூபா என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
அரசாங்கம் பிரச்சார நோக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.