யேமனிய சனா நகரில் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில்

 

2011-03-22-ap-yemen-protestjpg-cb975cb7da88d7d4

சவூதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பின் வான் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யேமனிய சனா நகரில் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.

யேமனில் கடந்த சில வாரங்­க­ளாக இடம்­பெற்­று­வரும் மோதல்­களில் சிக்கி 540 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ர­ிழந்­துள்­ள­துடன் 1,700 பேர் வரை காய­ம­டைந்­துள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.

அதே­ச­மயம் அந்­நாட்டில் கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் வன்­மு­றை­களில் பலி­யா­ன­வர்­களில் குறைந்­தது 74 சிறு­வர்கள் உள்­ள­டங்­கு­வ­தாக ஐக்­கிய நாடுகள் நம்­பிக்கை நிதியம் கூறு­கி­றது.

காய­ம­டைந்­த­வர்­களில் 44 பேர் சிறு­வர்­க­ளாவர். மேலும் 100,000 பேருக்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
யேம­னி­லான இந்த மோதல்களில் சிறு­வர்கள் சகிக்க முடி­யாத விலை­யொன்றை செலுத்த நேர்ந்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சிறுவர் நம்­பிக்கை நிதி­யத்தின் யேம­னுக்­கான பிர­தி­நிதி ஜூலியன் ஹார்னிஸ் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் யேமனில் சவூதி அரே­பியா தலை­மை­யி­லான படை­யி­னரின் வான் தாக்­கு­தல்­களின் துணை­யுடன் அந்­நாட்டு ஜனா­தி­பதி மன்சூர் ஹாடிக்கு ஆத­ர­வான படை­யினர் செவ்­வாய்க்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 19 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

துறை­முக பிராந்­தி­ய­மான முவல்­லா­விற்குள் பிர­வே­சிக்க முயன்று வரும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ள ஜனா­தி­பதி மன்சூர் ஹாடிக்கு விசு­வா­ச­மான படை­யினர் போராடி வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் பிந்­திய மோதல்­களில் 4 படை­வீ­ரர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 12 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.அதே­ச­மயம் ஹோதி கிளர்ச்­சி­யா­ளர்கள் மத்­தியில் ஆறு பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.

ஏடன் நக­ரி­லுள்ள கிளர்ச்­சி­யா­ளர்­களின் தளங்­களை இலக்­கு­வைத்து சவூதி தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் படை­யினர் உக்­கிர வான் தாக்­கு­தலை நடத்தி வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி ஹாடிக்கு விசு­வா­ச­மான படை­யினர் துறை­முகப் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து கிளர்ச்­சி­யா­ளர்­களை பின்­வாங்கச் செய்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அந்­நாட்டில் முதல்நாள் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற மோதல்­களில் 140 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­ன­துடன் பெருந்­தொ­கை­யானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
இந்த வன்­முறை மோதல்­களால் யேம­னிய பிராந்­தி­யத்­திற்குத் தேவை­யான மருத்­துவ உத­வி­களை விநி­யோ­கிப்­ப­தற்கு செஞ்­சி­லுவைச் சங்கம் மேற்­கொண்ட முயற்­சிகள் தாம­தத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

யேமனின் சட்­ட­பூர்­வ­மான தலை­வ­ராக ஐக்­கிய நாடுகள் சபையால் கரு­தப்­படும் ஹாடி, கிளர்ச்­சி­யா­ளர்­களின் தாக்­குதல்கள் அதி­க­ரித்­த­தை­ய­டுத்து கடந்த மாதம் நாட்டை விட்டு வெளி­யேறி சவூதி அரே­பி­யாவை தஞ்­ச­ம­டைந்­துள்ளார்.

செஞ்­சி­லுவைச் சங்கம் சனா நக­ரி­லி­ருந்து தனது 11 உத்­தி­யோ­கத்­தர்­களை வெளி­யேற்­றி­யுள்­ளது.யேமனில் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை யின் பொருட்டு சவூதி அரே­பியா தலை­மை யில் எகிப்து, ஜோர்தான், மொரோக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடு­களால் மேற்­கொள்­ளப்­படும் வான் தாக்­கு­தல்­களை இடை­நி­றுத்த ஐக்­கிய நாடுகள் சபையை ரஷ்யா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதே­ச­மயம் இந்­திய கப்­ப­லொன்றின் மூலம் மேற்கு ஹொடேய்டா துறை­மு­கத்­தி­லி­ருந்து 450 பேர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.ஏனைய சுமார் 100 பேர் சீனக் கப்­பலொன் றின் மூலம் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள னர்.பிரான்ஸானது யேமனிய கிழக்கு பால் ஹாப் துறைமுகத்திலிருந்து 63 வெளிநாட் டவர்களை வெளியேற்றியுள்ளது.
மேலும் ஜோர்தான் 300 க்கு மேற்பட்ட தனது பிரஜைகளை யேமனிலிருந்து வெளி யேற்றியுள்ளது.

அதேசமயம் தமது பிரஜைகளை வெளி யேற்றும் முகமாக 3 இந்திய விமானங்களும் ரஷ்ய விமானம் ஒன்றும் திங்கட்கிழமை சனா நகரில் தரையிறங்கியுள்ளமை குறிப் பிடத்தக்கது.