போர் குற்ற விசாரணைகளுக்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் : டொம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் யோசனைக்கு அமைய, போர்க்குற்றங்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணை மிகவும் சிக்கலானதாக இருக்கும் என ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொம் மெலினோவிஸ்கி தெரிவித்துள்ளார்.

சர்வதேச செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு ஆலோசனைகள் அத்தியாவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய யோசனைகளை முழுமையாக செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பான நம்பிக்கை குறைந்துள்ளது. போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது சிக்கலான காரியம் என்றாலும் மக்களுக்குள் நம்பிக்கை ஏற்படுத்த அதனை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் டொம் மெலினோவிஸ்கி மேலும் தெரிவித்துள்ளார்.