பங்களாதேஷை சேர்ந்த நால்வருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது

சிங்கப்பூரில் உள்ள ஒரு நீதிமன்றம், பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த நான்கு பேர் அவர்கள் நாட்டில் இஸ்லாமியவாத பயங்கரவாத திட்டத்தை தீட்ட நிதி திரட்டிய குற்றச்சாட்டிற்காக அவர்களுக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.

நான்கு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்களுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பங்களாதேஷைச் சேர்ந்த மற்ற இருவர் குற்றத்தை மறுத்ததால் வழக்கை சந்திக்கிறார்கள்.

முதலில், தீவிரவாதத்திற்கு நிதி திரட்டுவதற்கு எதிரான சிங்கப்பூரின் புதிய சட்டத்தின் கீழ் தண்டனைகள் விதிக்கப்பட்டன.

சிங்கப்பூரின் கட்டுமான துறை மிக அதிகமாக பங்களாதேஷ் மற்றும் பிற வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியுள்ளது.