அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அபிவிருத்திக்கு 97 மில்லியன் நிதி ஒதுக்கீடு – இராஜாங்க அமைச்சர்

க.கிஷாந்தன்

IMG_9340_Fotor

 

பாடசாலையின் மாணவர்களின் பற் சுகாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மலையகத்தில் மூன்று பிரதான பாடசாலைகளில் பற் சுகாதார பிரிவை அமைப்பதற்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அதன்படி நுவரெலியா மாவட்டத்தில் இராகலை, இராகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கும், வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட சிங்கள மொழி பாடசாலை ஒன்றிற்கும், அட்டனில், அட்டன் ஹைலண்ஸ் கல்லூரிற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மலையகத்தில் இவைகள் அமைப்பதன் ஊடாக, பாடசாலை மாணவர்களின் பற் சுகாதாரத்தை மேம்படுத்த உதவுகின்றது.

IMG_9358_Fotor

 

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் 12.07.2016 அன்று அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் பற் சுகாதார பிரிவை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இதன் போது பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ்.விஜயசிங், ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் பெருந்தோட்ட அபிவிருத்தி பிரிவுக்கான பணிப்பாளர் திருமதி.சபாரஞ்சன், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

அதன்பின் ஆசிரியர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியானது மலையகத்தில் காணப்படும் பாடசாலைகளில் ஒன்றாகும். இதன் பெறுபேற்று வளர்ச்சியே இதற்கு காரணமாக அமைகின்றது. இது ஒரு மாகாண பாடசாலையாக இருந்தாலும், தேசிய பாடசாலை தரத்திற்கு அபிவிருத்தி செய்ய கல்வி இராஜாங்க அமைச்சரான எனது காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன் அடிப்படையில் இந்த பாடசாலையின் அபிவிருத்திக்கு 97 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலை கட்டிட அபிவிருத்தி, விஞ்ஞான ஆய்வுகூட பொருட்கள் கொள்வனவு, தளபாடங்கள், திருத்த பணிகள், பற் சுகாதார சிகிச்சை நிலையம், மேலும் தொழில்நுட்ப கூடங்கள் அமைத்தல் போன்ற இன்னொரென செயற்பாடுகள் முன்னெடுக்கபடவுள்ளது.

இந்த பாடசாலை பெறுபேற்று ரீதியில் மேலும் அபிவிருத்தி அடைய வேண்டுமென்றால் இந்த பாடசாலைக்கு வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது எங்களது கடமையாகும். அதனையே நாங்கள் செய்து வருகின்றோம். இதற்கு அணைவரினதும் அவசியமாகும்.