கோட்டாபய ராஜபக்ஸவைப் பாதுகாத்த 25 இராணுவ வீரர்கள் நீக்கம்

தனக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பை நீக்கி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பாதுகாப்புக்கு நியமித்துள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 
இன்று காலை முதல் அமுலாகும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தனது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த 50 இராணுவ வீரர்களில் 25 பேரை விலக்கிக் கொண்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் 25 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
 

தமது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனால் இராணுவப் பாதுகாப்பினை நீக்க வேண்டாம் எனவும் கோதபாய கோரியிருந்தார்.

 
முக்கிய பிரபுக்களுக்கான இராணுவப் பாதுகாப்பினை நீக்கி விசேட அதிரடிப்படையினரிடம் பாதுகாப்பு கடமைகளை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்திருந்தது.

 
இதன் அடிப்படையிலேயே இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு விசேட அதிரடிப்படையினரிடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பும் அண்மையில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.