ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் இலங்கையை வந்தடைந்தார்

ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலினோஸ்கி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக,  கொழும்பை வந்தடைந்துள்ளார்.

Tom-Malinowski

ஜனநாயகம், தொழிலாளர் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜக்கிய அமெரிக்காவிற்கான உதவிச் செயலாளராக செயற்படும் டொம் மாலினோவ்ஸ்கி (Tom Malinowski)  இலங்கையில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, போருக்கு பின்னரான, புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.