பேரீச்சம் பழத்திற்கு சுங்க வரியை நீக்குவது குறித்து ஹலீம்-ரவி பேச்சு

புனித ரமழான் மாதத்தை முன்­னிட்டு சவூதி அரே­பியா உள்­ளிட்ட மத்­திய கிழக்கு நாடு­க­ளினால் இலங்­கைக்கு அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­படும் பேரீச்சம் பழத்­திற்­கான இறக்­கு­மதி வரி­யை நீக்குவது குறித்­த­தான பேச்­சு­வார்த்­தை­யொன்று முஸ்லிம் சமய விவ­கார, தபால் மற்­றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச். ஏ.ஹலீம் மற்றும் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்­கி­டையே இடம்­பெ­ற­வுள்­ளது. 

M.H.A.-Haleem-Minister-e1447495186102

இது தொடர்பில் அமைச்சர் ஹலீம் விடிவெள்ளிக்கு தெரி­விக்­கையில்,
சவூதி அரே­பி­யா­வினால் அன்­ப­ளிப்பு செய்­யப்­பட்ட பேரீச்சம் பழம் இன்­றைய தினம் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சினால் பொறுப்­பேற்­கப்­ப­ட­வுள்­ளது. சுமார் 200 தொன் பேரீச்சம் இவ்­வாறு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.

அதற்­காக  இறக்­கு­மதி வரி செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. ஏற்­கனவே எமது அமைச்­சுக்கு நிதி ஒதுக்­கீட்டில் குறைந்த அள­வி­ளான தொகையே ஒதுக்­கப்­பட்­டது. இந்­நி­லையில் அன்­ப­ளிப்பு பேரீச்சம் பழத்தை சுங்க வரி­யின்றி இறக்­கு­மதி செய்­வது குறித்து நிதி அமைச்­ச­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளேன். 

இது தொடர்பாக அவ­ருடன் தொலை­பே­சி­யூ­டாக கதைத்­துள்ளேன். விரைவில் இரு­வரும் நேரில் சந்­தித்து இது குறித்து பேச­வுள்ளோம்.

இதே­வேளை, இம்­முறை சவூதி அரசு 200 தொன் பேரீச்சம் பழத்­தையே அன்­ப­ளிப்­பாக தந்­துள்­ளது. கடந்த வருடம் 250 தொன் பேரீச்சம் பழம் கிடைக்­கப்­பெற்­றது. இவை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்க போது­மா­ன­தாக இல்லை.  

எனவே, எமக்­கான பேரீச்சம் பழத்தை அதி­க­ரித்து தரு­மாறு சவூ­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்ளோம்.

அத்­துடன் குவைட், ஐக்­கிய அரபு இராச்­சியம் போன்ற நாடு­க­ளு­டனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.

அந்நாடுகளிலிருந்து பெருந்தொகை பேரீச்சம் பழம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.