கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்பு குறித்து அவுஸ்திரேலியா கவனம்

Australia cricket_Fotor

 

கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கட் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகின்றது.
2014ம் ஆண்டு உள்நாட்டு போட்டியொன்றின் போது பில் ஹக்ஸ் என்ற வீரர்பந்து தலையில் பட்டு உயிரிழந்தார்.இந்த சம்பவத்தைக் கருத்திற் கொண்டு சில பாதுகாப்பு நியதிகளை அந்நாட்டு கிரிக்கட் நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.
வேகப்பந்து மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்நோக்கும் துடுப்பாட்ட வீரர்கள் கட்டாயம் ஹெல்மட்களை அணிய வேண்டுமென அறிவித்துள்ளது.
பயிற்சிகளின் போதும், விக்கட்டுக்கு அருகாமையில் பந்து தடுக்கும் வீரர்கள் மற்றும் விக்கட் காப்பாளர்களும் தலைக்கவசம் அணிய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.