முதல் வெற்றி யாருக்கு? MI VS KKR ?

 

download

download (1)

 

 

 

 

 

எட்டாவது ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடர் இன்று துவங்குகிறது. கோல்கட்டாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா, மும்பை அணிகள் மோதுகின்றன.

கோல்கட்டா அணியை பொறுத்தவரை ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்குகிறது. ராபின் உத்தப்பா, கேப்டன் காம்பிர் ஜோடி வலுவான துவக்கம் தர வேண்டும். சமீபத்திய ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்காக அசத்திய உத்தப்பாவின்(11 போட்டி, 912 ரன்கள்) அனுபவம் உதவும். மனீஷ் பாண்டே, ‘ஆல்-ரவுண்டர்’ யூசுப் பதான் தங்கள் பங்கிற்கு ரன் குவிப்பில் ஈடுபடுவது அவசியம். சூர்யகுமார், ‘ஆல்-ரவுண்டர்’ சாகிப் என பேட்டிங் வரிசை பலமாகவே உள்ளது.
நரைன் ஜாலம்:
‘சுழல்’ நாயகன் சுனில் நரைன் கடந்த 7 மாதங்களாக, சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை. இருப்பினும், இவர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன், கரியப்பாவும் கைகோர்த்தால், ‘சுழல்’ பலம் கூடும். ‘வேகத்தில்’ மார்னே மார்கல், உமேஷ் விக்கெட் வேட்டை நடத்தலாம். சொந்த மண்ணில் நடப்பது சாதகமானது.
ஆண்டர்சன் ஆதிக்கம்:
மும்பை அணியில் சிம்மன்ஸ், ஆரோன் பின்ச், போலார்டு என அதிரடி வீரர்கள் அதிகம் உள்ளனர். இதில், கடந்த தொடரில், ராஜஸ்தானுக்கு எதிரான 44 பந்தில் 95 ரன்கள் விளாசிய கோரி ஆண்டர்சன் இருப்பது பலம். கேப்டன் ரோகித், இதே ஈடன் கார்டன் மைதானத்தில்தான், இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். இந்த ராசி இன்றும் கைகொடுக்கலாம்.
பந்துவீச்சில் சுழல் வீரர்கள் ஹர்பஜன், பிரக்யான் ஓஜா நம்பிக்கை அளிக்கின்றனர். ஹேசல்வுட், மலிங்கா, வினய் குமார் என வேகக்கூட்டணியும் அச்சுறுத்தலாக உள்ளது. தவிர, பயிற்சியாளர் பாண்டிங், ஆலோசகர் சச்சினின் அனுபவம் நிச்சயம் உதவும்.

ஆடுகளம் எப்படி
ஈடன் கார்டன் ஆடுகளம் பொதுவாக, சுழலுக்கு சாதகமானது. இது இன்றும் தொடர வாய்ப்புள்ளது.

மழை வருமா
போட்டி நடக்கும் கோல்கட்டாவில், மழை வர 50 சதவீதம் வாய்ப்புள்ளது.

அணியின் சொத்து
கோல்கட்டா கேப்டன் காம்பிர் கூறுகையில்,” எங்கள் அணியின் மிகப்பெரும் சொத்தாக, நரைன் திகழ்கிறார். இவருக்கு நிகரான, சுழற்பந்துவீச்சாளர் வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை,” என்றார்.

வெற்றி முக்கியம்
மும்பை அணி கேப்டன் ரோகித் கூறுகையில்,” ஈடன் கார்டன் மைதானத்தில் அதிக வெற்றிகள் பெற்றுள்ளோம். முதல் போட்டியில் வெற்றி என்பது முக்கியமானது. பேட்டிங், பவுலிங் என எதை தேர்வு செய்தாலும், வெற்றிக்கு முயற்சிப்போம்,” என்றார்.